இது வேற லெவல்! 2 ஆண்டுகளில் 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு! இன்று ரெக்கார்ட் படைக்கும் சேகர் பாபு
சென்னை; தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் 1,000 ஆவது குடமுழுக்காக சென்னை மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு இன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அன்னதானம் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் டாப் அமைச்சர்களில் ஒருவராக சேகர் பாபு பார்க்கப்படுகிறார். இந்த துறையில் இவரின் பணிகள் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
அதோடு கோவில் நிலங்கள் கடந்த இரண்டு வருடங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் கணக்கில் மீட்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. கோவில் சொத்துக்கள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக இணையத்திலும் பதிவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து கோவில் சொத்து விவரங்களும் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே சேகர் பாபு அறிவித்து இருந்தார். அதன்படியே கோயிகளுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு கூட சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.08.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 80 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகம், தடுப்புச் சுவர்கள், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம். உணவருந்தும் கூடம், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரி ஆய்வகங்கள் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 999 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன, என்று அறிவித்தார்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் 1,000 ஆவது குடமுழுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் கோயில்களைப் புனரமைத்து திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது; அந்த வகையில், 1,000 ஆவது குடமுழுக்காக சென்னை மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு வருகின்ற இன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு பிறகும். காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகும், இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்தக்கோலம்அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகும், திருநெல்வேலி மாவட்டம் அரிகேசவநல்லூர் கோவிலிலும் 100 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு நடைபெற்றது, என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications