இனி எங்கேயும் அலைய வேண்டியது இல்லை.. மக்களுக்கு தமிழ்நாடு அரசு சொன்ன நல்ல செய்தி.. ஆஹா பொற்காலம்தான்
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு.. முக்கியமாக விவசாயிகளுக்கு நல்ல செய்தி ஒன்றை அரசு சொல்லி உள்ளது. உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் க்ரைன்ஸ் (GRAINS) எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.
முன்பெல்லாம் விவசாயிகள் பல்வேறு உதவித்தொகையை பெற, பல்வேறு சேவைகளை பெற வேறு வேறு இடங்களுக்கு அலைய வேண்டி இருந்தது. தற்போது அனைத்தையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.
இயற்கை பேரிடர் நிவாரணம், பயிர்க்கடன் வாங்குவது, நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை பெறுவது என இனி எதற்கும் தனித்தனியாக அலைய வேண்டியது இல்லை, விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்று தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.,

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடந்த 2103.2023 அன்று தாக்கல் செய்த 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், புதிய இணையதளமான GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) குறித்து பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டப்பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு சென்று, பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தரவேண்டியுள்ளது. இத்தகைய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கிக் கணக்கு. ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி, விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி புதிய இணையதளமான GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) அறிமுகப்படுத்தப்படும்.
இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் (One Stop Solution கிடைக்கும். இதன் மூலம், பயிர்க்கடன், நெல். கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கைப் பேரிடர் நிவாரணம், நலத்திட்ட உதவிகள் வேளாண்மை சார்ந்த 13 க்கும் மேற்பட்ட துறைகளின் பல்வேறு திட்டப் பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கும் அரசின் பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

அமைச்சர் அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பினை செயல்படுத்துதல் தொடர்பாக, வேளாண்மை இயக்குநர் பார்வையில் படிக்கப்பட்ட தனது 3103.2023 நாளிட்ட கடிதத்தில் கீழ்க்காணும் கருத்துருவினை அனுப்பியுள்ளார்:
வேளாண்மை - உழவர் நலத் துறையானது, 2010.2011 ஆம் ஆண்டு முதல் வேளாண்மையில் தகவல் தொழில் நுட்பத்தை உட்புகுத்தி விவசாயிகளுக்கான அனைத்து சேவைகளையும் இலகுவான முறையில் வழங்கி வருகிறது. மேலும், வேளாண்மைத் துறை மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள், விவசாயிகளின் வாழ்வு செழிக்க பல்வேறு சேவைகளை வழங்கி நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காத்து வருகிறது. தற்போதைய சூழலில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான சேவைகளை இந்த துறைகளில் இருந்து பெற. பெயர் முன்பதிவு செய்து துறைக்கு தேவையான ஆவணங்களை தனியே சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இந்த நடைமுறையானது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதோடு அயர்ச்சியை தரக்கூடியது.
இதை GRAINS இணைய பக்கம் மாற்ற கூடியது.

CRAINS இயங்குதளத்தால் பெறப்படும் நன்மைகள் பின்வருமாறு:
* ஒற்றைசாளர (Single Window Portal) வலைதளமாக செயல்படுவதால்,
விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில்
பதிவுசெய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
* ஒவ்வொரு முறையும் திட்டப் பெறுவதற்கு, விவசாயிகள் விண்ணப்பிக்கும்போது, ஆவணங்கள் தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
பலன்களை
* ஏதேனும் ஒரு திட்டத்தில் வழங்கப்படும் சேவைகளுக்கு கூடுதல்
விவரங்கள் தேவைப்படுமாயின், அது மட்டுமே சம்பந்தப்பட்ட துறையால் சேகரிக்கப்படும்.
அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை
உறுதிப்படுத்திடமுடியும்.
விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்;
* விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவுசெய்வதால், முன்னுரிமை அடிப்படையில், அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். வேளாண் சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள், பயிர்விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயன்களை அளிக்க முடியும்.
ஆதார் எண் அடிப்படையில், வங்கிக் கணக்கிற்கு நேரடிப் பணப்பரிமாற்றம் மூலம் நிதித்திட்டப்பலன் அனுப்பப்படும். பயிர்க்கடன் பெற முக்கிய நிதி நிறுவனங்களை இணைத்தல்
* பயிர் காப்பீடு -பயிரிடப்பட்ட பயிர் மற்றும் பரப்பளவை சரிபார்த்தல்
i. வேளாண்மைத்துறை,
ii. தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை,
道 வேளாண் விற்பனை வேளாண் வணிகத் துறை
iv.
விதைச்சான்றளிப்பு-அங்ககச் சான்றளிப்புத் துறை,
வேளாண் பொறியியல் துறை, wi சர்க்கரைத்துறை,
wii. வருவாய்த்துறை,
VIIL பேரிடர் மேலாண்மைத் துறை
ix. கூட்டுறவுத்துறை,
x.
பட்டுவளர்ச்சித்துறை.
xi. உணவு வழங்கல் துறை,
xil ஊரக வளர்ச்சித் துறை
xiii. கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் இதர துறைகள் மூலம் வழங்கப்படும் வேளாண் சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து வழங்கும் பயன்பாட்டு இயங்குதளமாக GRAINS இயங்குதளம் அமைய உள்ளது.
அதோடு, GRAINS இயங்குதளமானது. இறுதிப் பயனாளர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைய உள்ளதால், தங்கள் விவரங்களை எளிதாக சமர்ப்பிக்கவும், அளித்த தகவல்களை மாற்றம் செய்து கொள்ளவும் இயலும். மேலும், GRAINS இயங்குதளத்தினை 2023-24 ஆம் நிதி ஆண்டில் செயல்படுத்திட நிதி ஆதாரம் தேவையில்லை எனவும் குறிப்பிட்டு உரிய ஆணை வேண்டி வேளாண்மை இயக்குநர் அரசுக்கு தனது கருத்துருவினை அனுப்பியுள்ளார்,
மேலும், ஒன்றிய அரசு, மேற்காணும் விவரங்களை ஒன்றிணைத்து, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தினை வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து வேளாண்மை இயக்குநரால் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வேளாண் சார்ந்த அரசின் திட்டப் பலன்களை எளிதில் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த GRAINS வலைதளத்தில் விவசாயிகள் தங்களது அடிப்படைத் தகவல்களை பதிவு செய்திட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications