Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நொடிக்கு நொடி.. அலறுது ஆம்னி பஸ்கள்.. சாட்டையை சுழட்டி விடாமல் விரட்டும் தமிழக அரசு.. மக்கள் நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக போக்குவரத்து துறை எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காரணமாக, இனி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என்று நம்பப்படுகிறது.

பொங்கல் பண்டிகை, புத்தாண்டு, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில், ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் அதிகரித்து விடும்... எனவே இதுபோன்ற சிறப்பு நாட்களில், ஆம்னி பஸ்களின் கட்டணத்தை பார்த்து பொதுமக்கள் கலங்குவதும், அரசுக்கு கோரிக்கை விடுப்பது இயல்பாகிவிட்டது.

Tamil Nadu Government Next Move over Omni Buses High Charges and What did Minister Sivasankar say

விதிமுறைகளை மீறக்கூடாது, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று என்று தமிழக அரசு ஒவ்வொருமுறையும் எச்சரித்தபடியே உள்ளது. ஆனாலும், கட்டண கொள்ளை அதிகரித்து வருகிறது.

நடத்தை விதிகள்: அதனால்தான் தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையினர், ஆம்னி பஸ்களில் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி, விதிகளை மீறும் பஸ்களையும் சிறைபிடித்து வருகிறார்கள்.. சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு அபராதமும் விதிக்கிறார்கள். அரசின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்து வருகிறது..

இப்படிப்பட்ட சூழலில், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்தும்படி அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வழக்குகள்: இந்த வழக்குகள் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வெறும் அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை என்று கூறியதுடன், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமல்ல, தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

சிவசங்கர்:
நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவை தமிழக அரசும் உடனடியாக அமல்படுத்த துவங்கியிருக்கிறது.. ரூ.750 கட்டணத்தில் ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில்களையும் தரிசிக்கும் சிறப்பு பஸ்கள் தேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:

"கொரோனா காலத்துக்குப் பிறகு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்கியமாக, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுவதால், கடந்தாண்டைவிட 35 சதவீதம் கூடுதலாக அரசுப் பள்ளி- கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்திருக்கிறது.. மாணவர்களுக்கும் தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளதால், மாணவர் சேர்க்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதிக கட்டணம்: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் மீது அபராதம் மட்டுமின்றி உரிமம் ரத்து போன்ற கடும் நடிவடிக்கைகளையும் எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள்.

அரசு வழக்கறிஞர்களோடு ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், எங்கெல்லாம் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமோ அந்த வழித்தடத்தில் எல்லாம் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தந்துள்ளார் அமைச்சர்.

ஏற்கனவே தமிழக அரசின் அடுத்தடுத்த அதிரடிகளால் நொந்துபோயிருக்கும் ஆம்னி பஸ் தரப்பானது, தற்போதைய நீதிமன்ற உத்தரவுகளினால் நிலைகுலைந்து போய்விட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+