இது லிஸ்ட்லயே இல்லையே..லட்ச லட்சமாய் சம்பாதிக்கலாம்! தமிழக அரசின் செம அறிவிப்பு! இதை செய்தால் போதும்
சென்னை: தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பாக தொழில்முனைவோருக்கு சாட் ஜிபிடி பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சொந்தமாக யூட்யூப் சேனல் தொடங்குவது தொடர்பான பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு சான்றிதழும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய தொழில்களை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகத் தொழில் முதலிட்டாளர் மாநாடு மூலம் ஏற்கனவே பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.
வேலைவாய்ப்பு மட்டும் இன்றி இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் தொழில் முனைவோர் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் சாட் ஜிபிடி மூலம் தமிழ்நாடு அரசு பயிற்சி அளிக்கிறது.
இந்த நிலையில் தொழில் முனைவோருக்கு சொந்தமாக யூட்யூப் சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சி வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்,"தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்' தொடர்பான பயிற்சியானது 22.04.2025 முதல் 24.04.2025 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.
"சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல் சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. மற்றும் விதிகள்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் /பெண்/திருநங்கைகள்)18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி /கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 2.4.8.8 ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. அலுவலக சாலை என்ற 9360221280/9543773337 (முன்பதிவு அவசியம், பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்)" என கூறப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications