விஜயதசமி.. இன்று மாணவர்கள் சேர்க்கை... பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. தமிழக அரசு அதிரடி
சென்னை: விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
இன்று விஜயதசமி என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.. அதுபோலவே, இன்று விஜயதசமி.. விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம்.

சிறப்பு வழிபாடுகள்: வீடுகளில் பூஜைகளை செய்தும், கோவில்களுக்கு சென்றும் விஜயதசமியை பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜய தசமியை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன. அதனால்தான், சிறுவர்கள் இன்றைய விஜயதசமி நன்னாளில், ஆரம்பக்கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது..
இந்த தினத்தில் தங்கள் குழந்தைகளைக் கை விரல் பிடித்து, நெல்லை தட்டில் பரப்பி, முதல் எழுத்தாக "அ" என்று எழுதப்பழக்குவார்கள் என்பதால், குழந்தைகளுக்கான கல்வி வித்யாரம்பம் இன்று நடைபெறுகிறது.. அதேபோல, சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தொழில் சிறப்பதற்காகவும், தாங்களும், தங்களின் கடைகளுக்கு வருபவர்களும் எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக வாழவும் பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
நவராத்திரி: நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளான இன்று விஜயதசமியில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது வழக்கம்.. எனவே, பெற்றோர்கள் இந்த தினத்தில் தங்கள் குழந்தைகளை கை விரல் பிடித்து, நெல்லை, தட்டில் பரப்பி, முதல் எழுத்தாக "அ" என்று எழுதப் பழக்குவார்கள்.. அதனால்தான், தனியார் பள்ளிகள் இந்த தினத்தை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கின்றன.
உடனே, தமிழக அரசும், இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.. கடந்த 2018ம் ஆண்டு முதலே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விஜய தசமி தினத்தில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றது. இந்த வருடம் 6வது வருடம் என்பதால், தமிழ்நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளன. உரிய வயதை அடைந்த மாணவர்கள், பள்ளிகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.. இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள்: அந்தவகையில், 2 நாட்களுக்கு முன்பு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தது.. அதன்படி, அரசு விடுமுறை தினமாக இருந்தாலும் விஜயதசமியன்று, ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.. மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியர்களின் வருகை முக்கியம் என்றும் அரசும் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை இன்று மேற்கொள்கிறார்கள்..
வேலூர்: இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி, எண்ணும் எழுத்தும் வகுப்பறை, விலையில்லா புத்தகம், காலை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதாக தனியார் பள்ளிக்கு போட்டியாக அரசு பள்ளிகளும் விளம்பரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications