திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் உட்பட.. 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். திருச்சி டிஐஜியாக இருந்த வருண்குமார் ஐபிஎஸ் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இது குறித்து தமிழக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமப்பட்டிருப்பதாகவும், திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடிக்கு மாறறப்பட்டிருப்பதாகவும், டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமிக்கப்பட்டிருப்பதாகவும்,

சென்னை, குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக இருந்த ஆயுஷ் மணி திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக (ஏடிஜிபி) நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications