பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ 5 ஆயிரம் பரிசு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு ரூ 5000 வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வறிப்பிற்கிணங்க சேலம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பிறந்தநாளுக்கான பேச்சுப் போட்டிகள் முறையே 22.10.2024, 23.10.2024 மற்றும் 24.10.2024 ஆகிய நாள்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி சேலம், அரசுக் மகளிர் கலைக் கல்லூரியில் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000. மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.
எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் முறையாக போட்டி நடைபெறும் நாளன்று நேரில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications