கனடா வாழ் தமிழர்களுக்கு உதவ தயாராகும் தமிழக அரசு.. இன்று ஆலோசனை.. விரைவில் உதவி எண்கள்
சென்னை: கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார். கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவற்றை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக 1980கள் முதல் 1990கள் வரை ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. 1990களில் காலிஸ்தான் இயக்கம் அழிக்கப்பட்டது.

இதனையடுத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் பலர் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கும் போய் காலிஸ்தான் தனிநாட்டுக்கான இயக்கங்களை இந்த பயங்கரவாதிகள் நடத்தினர்.
இப்படியான இயக்கங்களில் ஒன்று காலிஸ்தான் புலிப் படை. இதன் தலைவரான நிஜ்ஜாருக்கு கனடா அரசு குடியுரிமை கொடுத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதால் தற்போது இந்தியா- கனடா இடையே மோதல் வெடித்துள்ளது.
கனடா, இந்தியா நாடுகளிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கனடா குடியுரிமை பெற்ற நிஜ்ஜாரை இந்தியா ஏஜென்சிகள்தான் படுகொலை செய்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றச்சாட்டியதால் இரு நாடுகளிடையேயான உறவு முறியும் நிலை உருவாகி உள்ளது. கனடாவில் இருந்து இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேற்றப்பட்டார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து நாட்டில் இருந்து கனேடிய தூதரக மூத்த அதிகாரியை வெளியேற்றியது.
இந்தியர்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி,
"கனடா அரசு இவ்விவகாரத்தை கையாள்வதில் பாரபட்சமாக இயங்கி வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்துள்ள குற்றச்சாட்டுகான ஆதாரம் எதையும் இந்தியாவுடன் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை. அதனால், இதனை அந்நாட்டு அரசு அரசியல் ரீதியாக முன்வைத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக கனடா மாறி வருவதாகவும் கருதுகிறோம். பிரிவினைவாதிகள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை மேற்கொள்பவர்கள் வசிக்கும் இடமாக கனடா விளங்குவதாக கருதுகிறோம். அதனால், சர்வதேச அளவிலான நற்பெயர் குறித்து கனடாதான் கவலைகொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை வழங்கியுள்ள அறிவுறுத்தலில், "இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நம்முடைய தூதரக அதிகாரிகள் கனடிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்திய மாணவர்கள் கனடாவில் உள்ள தூதரகத்தில் தங்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் தூதரகம் சம்பந்தப்பட்ட மாணவர்களை தொடர்புகொள்ள இது உதவும்" என்று கூறியுள்ளது.

இதனையடுத்து கனடா வாழ் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்து தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. "கனடா வாழ் தமிழர்கள் யாரும் இதுவரை தமிழக அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை". அங்குள்ள நிலவரம் குறித்து இந்திய தூதரகம் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
"கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவற்றை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது". கனடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கனடா விவகாரம் தொடர்பாக வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications