பத்திரப்பதிவு அதிரடி.. வணிக மனை வழிகாட்டி மதிப்பு "3 மடங்கு" உயர்கிறதா.. விரைவில் வருகிறதா அறிவிப்பு
சென்னை: வணிக பயன்பாட்டில் உள்ள மனைகளுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள், மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. என்ன காரணம்?
பெரும்பாலான இடங்களில், குறைந்தபட்ச மதிப்புகள் மிக குறைவாக இருப்பதால், சமீபத்தில் அதை பத்திரப்பதிவு துறை சீரமைத்திருந்தது.. அந்தவகையில், குறைந்தபட்ச மதிப்பு சதுர அடிக்கு, 50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.
இதில், விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு ஏக்கருக்கு 2 லட்சம், 5 லட்சம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால், இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டபோதே சில குழப்பங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டன.

வணிகப்பகுதி: அதாவது, ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்பு, வணிகம், விவசாயம், தொழில் என பயன்பாடு அடிப்படையில், நிலங்கள் வகைபடுத்தப்பட்டுள்ளன.. இதில், குடியிருப்பு நிலத்துக்கான குறைந்தபட்ச மதிப்பு உயர்ந்த பகுதியில், வணிக பகுதி நிலங்களுக்கான மதிப்பு வேறாக உள்ளதால், பத்திரப்பதிவின்போதும், தணிக்கையின்போதும் இது குழப்பத்தை ஏற்படுத்துகிறதாம்.
அதனால், வகைப்பாடுகள் நிலையில் வேறுபாடுகள் அதிகரித்து உள்ளதால், பத்திரப்பதிவுகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இந்த வேறுபாடுகளை சீரமைக்க, பதிவுத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சார் - பதிவாளர்கள் தரப்பில் பரவலாக கருத்து சொல்லப்பட்டது.
விவசாய நிலங்கள்: தற்சமயம், விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு, ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றாலும், கிராமங்களில், குடியிருப்பு மனைகளின் குறைந்தபட்ச மதிப்பானது, சதுர அடிக்கு, 300 ரூபாயாகவும், வணிக மனையின் மதிப்பு சதுர அடிக்கு 100 ரூபாயாகவும் இருப்பது தெரியவந்தது.
எனவே, கிராம வாரியாக, பத்திரங்களின் அடிப்படையில், வணிக மனை விபரங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பெறப்பட்டதுடன், உள்ளூர் மக்களின் வாக்குமூலமும் பெறப்பட்டது.. இதை வைத்து, புதிய வரைவு மதிப்பு விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
புதிய வரைவு: சார் - பதிவாளர்கள் அனுப்பிய இந்த வரைவு அறிக்கையின் அடிப்படையில், வணிக மனைகளுக்கான புதிய குறைந்தபட்ச மதிப்புகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
புதிய வரைவு மதிப்புகளை 2 மடங்கு வரை உயர்த்தலாம் என பெரும்பாலானோர் பரிந்துரைத்தாலும், மீண்டும் மக்களிடம் கருத்து பெற்று, 3 மடங்கு அல்லது அதற்கு மேல் இருக்கும்படி, புதிய வரைவு மதிப்புகளை அனுப்ப பதிவுத்துறை அறிவுறுத்தியிருக்கிறதாம். இந்த திருத்தப்பட்ட அறிக்கை கிடைத்ததுமே, புதிய மதிப்புகள் அமலுக்கு வரும் என்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications