Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் விழுந்த "ஆச்சரியம்".. ஒருபக்கம் நீர்ப்பறவை.. மறுபக்கம் நிலப்பறவை.. தமிழக அரசு சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஈரநில பறவைகளின் எண்ணிக்கை மொத்தம் 6,80,028 என்று அரசு அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், தமிழக அரசின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதில், தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது, வருடந்தோறும் வடகிழக்கு பருவ மழை முடிந்த பின் நடக்கும்.

Tamil Nadu Government says about water birds have been directly counted in the wetlands in Tamilnadu

அதன்படி 2023 - 24ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு, நீர் பறவைகள், நிலப் பறவைகள் என, இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. நீர் பறவைகளின் கணக்கெடுப்பு, ஜனவரி மாதம் 27,, 28ம் தேதிகளிலும், நிலப் பறவைகளின் கணக்கெடுப்பு, மார்ச் 2, 3ம் தேதிகளிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார்.

கணக்கீடு: இந்நிலையில், வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வருடம் 389 பறவை இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும் என்றும் அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: "வனத்துறையால் நடத்தப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், பறவைகள் சரணாலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மதிப்பீடு நடத்தப்பட்டது.

வனப்பகுதிகள்: வனப்பகுதிகளில் 179, கிராமப்புறங்களில் 555 மற்றும் நகர்ப்புறங்களில் 170 என மொத்தம் 894 முனையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த ஆண்டு 389 பறவை இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும். அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள் ஆகும்.மொத்த பறவை எண்ணிக்கையான 6,80,028 இல் 79% நீர்ப்பறவைகள் (5,36,245) மற்றும் 21% நிலப்பறவைகள் (1,43,783) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 69913 நீர்வாத்துகள், 28,822 பூநாரைகள், 6,789 முக்குளிப்பான்கள், 19,919 கடற்கரை பறவைகள், 173294 கடற்புறா, ஆலா வகைகள், 17865 பெருங்கொக்குகள், 54008 பாம்பு தாரா மற்றும் நீர்க் காகங்கள், 165635 கூழைக்கடா, நாரை, கொக்குகள், அரிவாள்மூக்கன் மற்றும் கரண்டிவாயன் வகைகள் என மொத்தம் 536245 நீர் பறவைகள் நேரடியாக கணக்கிடப்பட்டுள்ளன.

பணியாளர்கள்: 6450 தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத் துறையைச் சேர்ந்த 3350 பணியாளர்கள் என மொத்தம் 9800 நபர்கள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றனர்.

மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் மதிப்பீடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ்.ரா.ரெட்டியின் மேற்பார்வையிலும், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்) ராகேஷ் குமார் டோக்ரா, கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) வீ.நாகநாதன், மற்றும் உதவி வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) அ.ஷர்மிலி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் : சில தினங்களுக்கு முன்பு, ராம்சார் பட்டியலில் 2 மாவட்டங்கள் இடம்பெற்றிருந்தன.. தமிழகத்தில் இதுவரை, 14 இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் இந்த ஆண்டுக்கான கணக்கில் கூடுதலாக, 2 இடங்களில், அரியலுார் மாவட்டத்தில், 1,121 ஏக்கர்பரப்பளவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில், 286 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லாங்வுட் சோலை காடுகள், ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+