பள்ளிகளில் அரையாண்டு தேர்வு எப்போது? முழுமையான அட்டவணை வெளியீடு! எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வின் முழுமையான பட்டியலை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.

அவ்வாறு செயல்படும் பள்ளிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் அவர்களுக்கு அரையாண்டு தேர்வு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வழக்கமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்திருந்தது. இதை அடுத்து அரையாண்டு தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒருபுறம் மாணவர்களும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு அரையாண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடைகிறது.
தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. இதில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையும், ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு விடுமுறை அடங்கும். மொத்தம் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்று முதல் மூன்றாம் பருவம் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்த நாளிலேயே மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தேர்வு அட்டவணை
10ஆம் வகுப்பு
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலை 9:45 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. 9.45 மணி முதல் 9.55 மணி வரை வினாத் தாள்களை படிக்கவும், தொடர்ந்து ஐந்து நிமிடம் தரவுகளை சரிபார்க்க நேரம் ஒதுக்கப்படுகிறது, 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கி 1 மணிக்கு நிறைவு பெறும்.
10.12.2024 - செவ்வாய் - தமிழ்
11.12.2024 - புதன் - விருப்ப மொழி பாடம்
12.12.2024 - வியாழன் - ஆங்கிலம்
16.12.2024 - திங்கள் - கணிதம்
19.12.2024 - வியாழன் - அறிவியல்
23.12.2024 - திங்கள் - சமூக அறிவியல்

12ஆம் வகுப்பு
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலை 9:45 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. 9.45 மணி முதல் 9.55 மணி வரை வினாத் தாள்களை படிக்கவும், தொடர்ந்து ஐந்து நிமிடம் தரவுகளை சரிபார்க்க நேரம் ஒதுக்கப்படுகிறது, 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கி 1 மணிக்கு நிறைவு பெறும்.
09.12.2024 - திங்கள் - தமிழ்
10.12.2024 - செவ்வாய் - ஆங்கிலம்
12.12.2024 - வியாழன் - கணினிஅறிவியல், கணினிபயன்பாடு, உயிர்வேதியியல், அரசியல் அறிவியல்,புள்ளியியல்
14.12.2024 - சனி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
17.12.2024 - செவ்வாய் - கணிதம், விலங்கியல், வணிகம், ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு
20.12.2024 - வெள்ளி - வேதியியல், கணக்கியல், புவியியல்
23.12.2024 - திங்கள் - இயற்பியல், பொருளாதாரம்" என கூறப்பட்டுள்ளது.

-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications