Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப கார்டுதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் அதிரடி! மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் பொருளில்லா அட்டை என 5 வகையான ரேஷன் அட்டைகள் செயலில் உள்ளன. குடும்பங்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து தான் அட்டை வகை தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, கோதுமையுடன், சர்க்கரை, மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறப்பு பொது விநியோக திட்டத்தின்கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவையும் அனைத்து நியாய விலை கடைகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Ration Tamil Nadu Government

குடும்ப கார்டுதாரர்கள்

இதனை தவிர, 2.25 கோடி குடும்ப கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் இலவசமாக பச்சரிசி, புழுங்கல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் முன்னுரிமை பிரிவுக்கு, ரேஷன் அட்டையிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோவும், அந்தியோதயா பிரிவுக்கு அதிகபட்சம் தலா, 35 கிலோவும்; முன்னுரிமையற்ற பிரிவுக்கு, 20 கிலோவும் வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை காரணமாக, ரேஷன் கடைகளில் பச்சரிசிக்கான தேவை கடந்த மாதம் முதலே அதிகரித்துவிட்டது. இதன்காரணமாக, கார்டுதாரர்களின் தேவைக்கு ஏற்ப, பச்சரிசி வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு, தமிழக உணவு துறை உத்தரவிட்டது.

அரிசி அட்டைதாரர்களுக்கு பச்சரிசி

அதில், குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப பச்சரிசி, புழுங்கல் அரிசியாக வாங்கிக் கொள்ளலாம் மாதந்தோறும், 3.60 லட்சம் டன் அரிசி தேவை; இதில் சராசரியாக, 30 சதவீதம் பச்சரிசியும், மீதி புழுங்கல் அரிசியும் வழங்கப்படுகிறது... வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், பலரும் பச்சரிசி வாங்கி வருகின்றனர்.

தீபாவளி முடியும்வரை பச்சரிசிக்கான தேவை அதிகரித்தபடியே இருக்கும் என்பதால், கார்டுதாரர்களின் தேவைக்கு ஏற்ப பச்சரிசி வினியோகம் செய்ய வேண்டும்" என்று கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படியே பற்றாக்குறை இல்லாமல் அனைத்து கார்டுதாரர்களுமே பச்சரிசியை பெற்று வருகிறார்கள்.

அடுத்த மாதம் ரேஷன்

முன்னதாக, தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருட்கள் அக்டோபர் மாதமே வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்திருந்தது..

தீபாவளி முடிந்ததுமே, நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதுதொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவமழை

தற்போது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

அதாவது அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 - 35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும், நவம்பர் மாத ஒதுக்கீடான 12 - 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் கடைகள்

நவம்பர் மாத அரிசியை, அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்திலும் தங்களுக்குரிய அரிசியினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்று அதாவது அக்டோபர் 21 முதல் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+