ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. உங்களுக்கு பென்ஷன் வருதா? அப்போ இதை முதலில் படிங்க.. "தங்கம்" அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் பென்ஷன் பெறக்கூடிய நபர்களை கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஓய்வூதியம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக, வழங்கப்படக்கூடிய அந்த ஓய்வு ஊதியங்கள், இப்போது வழங்கக்கூடிய 1000/- ரூபாயிலிருந்து 1200/- ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்காக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றிருக்கக்கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

பொதுவாக தமிழ்நாட்டிலே நான் குறிப்பிட்டது போல, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கையிலிருந்து வந்திருக்கக்கூடிய மக்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் வந்திருக்கிறது.
இந்த ஓய்வூதியத் திட்டங்களுடைய வரலாற்றை நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தோம் என்று சொன்னால், 1962-ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. அன்றைக்கு மாதத்திற்கு ரூபாய் 20/- அன்றைய சூழ்நிலையில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு இந்தத் திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
புதிய திட்டம்: இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் பென்ஷன் பெறக்கூடிய நபர்களை கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 107 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் கோபாலகிருஷ்ணன் அவர்களை நேரில் பாராட்டு தெரிவித்தார். கு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மூலமாக 01-05-1972 முதல் குடிமை ஓய்வூதியம் பெற்று வருகிறார்.
அவரது ஓய்வூதிய கொடுவை ஆணை எண். A-69690. ஓய்வூதியர் பிறந்த தேதி 26.10.1916. தனியர் தற்போது 107 வயதை நிறைவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களில் திரு.கு.கோபாலகிருஷ்ணன் அவர்ளே வயதில் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரு வாரிசுகள் உள்ளனர்.
இவர் இரண்டாம் உலகப் போர் (1939 1945) நடைபெற்ற காலத்தில் இராணுவத்தில் I.E.M.E படை பிரிவில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக் மற்றும் கனரக வாகன ஓட்டுநராக Lans Nayak பதவி நிலையில் ஐந்து வருடங்கள் பணிப்புரிந்துள்ளார். அப்போது பர்மா, மணிப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போரில் பங்கெடுத்துள்ளார். அன்றைய காலக்கட்டத்தில் ஐந்து பதக்கங்களையும் பெற்றுள்ளார். அதன் பிறகு ஒன்றிய அரசுப்பணியில் சில காலம் சுங்கத்துறையில் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து நாகப்பட்டினம், காவல் நிலையம் திட்டச்சேரியில் காவலராக (Police Constable) பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
அவர்களை கௌரவிக்கும் விதமாக மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும் கருவூல கணக்குத்துறை ஆணையர் திரு.க.விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப., அவர்களும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) திரு.ரஞ்சித் சிங் இ.ஆ.ப., அவர்களும், ஓய்வூதியர் வசித்து வரும் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர்காணலை மேற்கொண்டதுடன் நேர்காணல் சான்றிதழை அளித்து கௌரவித்தார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களை கௌரவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கௌரவிக்க கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications