செந்தில் பாலாஜிக்கு அறப்போர் இயக்கம் வைத்த செக்! ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக தமிழக அரசு பதில்
சென்னை: டிரான்ஸ்பார்மர் முறைகேடு தொடர்பாக முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்ய அனுமதி குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் 2021-2023ஆம் ஆண்டுகளில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ. 1,182 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ (Tangedco) தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால், இந்த வழக்கை உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த மனுவானது நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், "மனுதாரர் அளித்துள்ள புகார் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் முடிவெடுக்கவுள்ளனர். அதனால், இந்த மனு செல்லாததாகிவிட்டது" என வாதிட்டார்.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், "புகார் அளித்து இரு ஆண்டுகளாகிவிட்டன. அனைத்து ஆவணங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. மனு மீது விரிவான வாதங்களை முன்வைக்க விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications