ஜூன் பேமெண்ட் வரப்போகுது.. தமிழக அரசே அள்ளிக்கொடுக்கும் ரூ.3000.. யாருக்கெல்லாம் வரும்? ஜாக்பாட்
சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஜூன் மாத தொகை தமிழ்நாடு அரசு மூலம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இன்று முதல் அடுத்த சில நாட்களில் ஜூன் மாதத்திற்கான மாத தொகை ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மகளிர் உரிமை தொகை இந்த மாதம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் இந்த தொகை அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த மாதத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த விண்ணப்பங்களை சோதனை செய்து பயனாளிகளை சேர்க்க இந்த மாதம் உறுதியாகிவிடும். புதிய பயனாளிகள் அடுத்த மாதமே ரூ.1000 பெறுவார்கள். இதனால் இந்த மாதம் இதுவரை பயன் பெற்றவர்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் முழுக்க பின்வரும் 3 முக்கிய திட்டங்கள் மூலம் மாதம் ரூ. 3000 உங்க வங்கி கணக்கில் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் 2 வாரங்களுக்குள் இந்த தொகை ரிலீஸ் செய்யப்படும். இந்த மாதத்திற்கான தொகை அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது . அந்த திட்டங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
முதல் திட்டம்
தமிழ்நாட்டில் ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவு செய்யப்பட்டு விட்டது.
1. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.
2, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.
3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
4. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மொத்தம் இரண்டரை லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு இந்த மாதம் 15ம் தேதி பணம் வழங்கப்படும் மொத்தமாக 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.
இரண்டாம் திட்டம்
அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி மேலும் ரூபாய் 2000 மொத்தமாக வரும். புதுமை பெண் திட்டம் புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை மூலம் இந்த பணம் வழங்கப்படும்.
புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான இரண்டாம் தவணை இந்த வாரம் வழங்கப்படும். கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கு வழங்கப்படுகிறது?: அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.
மூன்றாம் திட்டம்
மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அமலில் உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அமலில் உள்ளது.. இதன் அடுத்த தவணை இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications