ரேஷன் கார்டுதாரர்களுக்கு தித்திக்கும் செய்தி! கேழ்வரகை போல் இன்னொரு பொருளும் தர திட்டமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வரும் நிலையில் தற்போது நீண்ட நாள் கோரிக்கையான புதிதாக ஒரு பொருளும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அரசு கொடுத்து வருகிறது.

ration shops tamil nadu government


தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு மானிய விலையிலும் விலையில்லாமலும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டுகள் ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரேஷன் கார்டுகளுக்கு நிறைய சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. கடந்த காலங்களில் முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நிறைய விலையில்லா பொருட்களை கொடுத்துள்ளனர். அது போல் திருமண உதவி திட்டம், கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை ரூ 12 ஆயிரம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

அது போல் பொங்கல் தொகுப்பு பொருட்கள், வெள்ள நிவாரணம், கொரோனா உதவித்தொகை உள்ளிட்டவையும் இந்த ரேஷன் கார்டுகளை வைத்து வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே புத்தகம் போல் இருந்த ரேஷன் கார்டுகளில் பக்கங்கள் தீர்ந்து விட்டால் அதில் இணைப்புகள் ஒட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன.

பலரது கார்டுகள் கந்த கோலமாகவே இருந்தன. இவை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் அட்டையாக மாற்றப்பட்டு மொபைல் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டது. அது போல் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கும் இந்த கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகையை பெற நிறைய பேர் ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்து வருகிறார்கள்.

கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் 2.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் புதிய பொருட்களை விநியோகம் செய்வது குறித்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஏற்கெனவே ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகிக்க தமிழக அரசு முடிவு செய்து கடந்த ஆண்டு முதல் நீலகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. பாமாயிலை விடுங்க, இதுவும் ரேஷனில் தரப்போறாங்களாம்.. சூப்பர்ல


எனவே கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் விவசாயிகளிடமிருந்து ஆண்டு முழுவது்ம கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு இந்திய உணவு கழகத்திடம் அனுமதியையும் தமிழக உணவுத் துறை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அது போல் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+