தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்... யாருக்கு எந்தப் பணி.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 49 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், அமலாக்கத்துறை ஐஜியாக இருந்த செந்தாமரை கண்ணன் திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே ஐஜியாக இருந்த வனிதா திருப்பூர் காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு
தமிழக அரசின் பிறப்பித்துள்ள உத்தரவின்படி:
கார்த்திகேயன் - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளர் & ஜோஷி நிர்மல் குமார் - சிபிசிஐடி ஐஜி
தேன்மொழி - சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் & நஜ்மல் ஹூடா - சேலம் காவல் ஆணையர்
ராஜேந்திரன்- சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் & நரேந்திர நாயர் - சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர்
லலிதா லஷ்மி - சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் & தீஷா மிட்டல் - மயிலாப்பூர் துணை ஆணையர்
குமார் - சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல துணை ஆணையர் & தீபா கனிகர் - அண்ணா நகர் துணை ஆணையர்
பாலாஜி சரவணன் - சென்னை தலைமையக துணை ஆணையர் &எஸ்.பி மகேந்திரன் - நிர்வாகத் துறை துணை ஆணையர்
மகேஷ்வரி - சேலம் சரக டிஐஜி & ராதிகா - திருச்சி சரக டிஐஜி
காமினி - மதுரை சரக டிஐஜியா & ரூபேஷ் குமார் மீனா - சென்னை சிபிசிஐடி டிஐஜி
ஆனி விஜயா - சென்னை நிர்வாகத் துறை டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள்
அதேபோல காஞ்சிபுரம் சரக டிஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி சென்னை தலைமையக இணை ஆணையராகவும், திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்து வந்த முத்துசாமி கோயம்புத்தூர் சரக டிஐஜியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், தேர்தலுக்காகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவுக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்றவர்கள்
பாலகிருஷ்ணன் - மத்திய மண்டல ஐஜி & பிரதீப் குமார் -சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர்
சுதாகர் - மேற்கு மண்டல ஐஜி & கார்த்திகேயன் - கீழ்ப்பாக்கம் துணை ஆணையர்
பிரபாகரன் - காவல்துறை விரிவாக்க துறை டி.ஐ.ஜி & கயல்விழி - திருச்சி ஆயுதப்படை பிரிவு டி.ஐஜி
சின்னசாமி - கடலோர பாதுகாப்பு குழுமம் டி.ஐ.ஜி & பர்வேஷ் குமார் - தஞ்சாவூர் சரக டிஐஜி

பதவி உயர்வு
அமித் குமார் சிங், அஷ்வின் எம்.கொட்னீஸ் ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அயல் பணியில் இருக்கக்கூடிய சரவணன், சேவியர் தன்ராஜ், அனில் குமார் கிரி ஆகிய மூவருக்கும் டி.ஐ.ஜி பதவி உயர்வு வழங்கப்பட்டு அதே பணியில் தொடர்வார்கள்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications