தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. சேலத்துக்கு புதிய ஆணையர்.. முதல்வர் ஆய்வால் அதிரடி
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் களஆய்வு மேற்கொண்ட நிலையில் தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிரடியாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகர போலீஸ் ஆணையர் உள்பட 3 பேரை இடமாற்றம் செய்து அதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பணிந்தீர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் துறை ரீதியாக நடக்கும் பணிகளை நேரடியாக களஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்காக ‛‛களஆய்வில் முதல்வர்'' என திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களி்ல ‛‛களஆய்வில் முதலமைச்சர்'' என திட்டத்தில் 2 நாள் பயணமாக சேலம் சென்றார்.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
இந்த ஆய்வின்போது பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விவாதித்தார். மேலும் சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தி விபரங்களை கேட்டறிந்தார். இந்நிலையில் தான் தற்போது தற்போது சேலம் மாநகர போலீஸ் ஆணையர் நஜ்மல் ஹோடா உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் ஆணையர் இடமாற்றம்
இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பணிந்தீர ரெட்டி பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை புறநகர் ஆவடி(திருவள்ளூர் மாவட்டம்) போக்குவரத்து தலைமையகம் மற்றும் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக ஐஜி அந்தஸ்தில் பணியாற்றி வந்த விஜயகுமாரி, சேலம் மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகர போலீஸ் ஆணையராக ஐஜி அந்தஸ்தில் பணியாற்றி வந்த நஜ்மல் ஹோடா ஆவடி போக்குவரத்து தலைமையகம் மற்றும் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவடிக்கு இணை ஆணையர்
இதேபோல் சென்னை ரயில்வே பிரிவு டிஐஜியாக இருந்த விஜயக்குமார், ஆவடி மாநகர சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆய்வை தொடர்ந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்பு நடந்தது என்ன?
இதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் வேலூரில் நடந்த களஆய்வில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்து விபரங்களை பெற்றார். இந்த ஆய்வு முடிந்த நிலையில் கடந்த 3ம் தேதி ராணிப்பேட்டை எஸ்பி, கலெக்டர் மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது சேலம் போலீஸ் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications