இனிக்காத மாம்பழம்..நடுரோட்டுக்கு வந்த விவசாயிகள்! வயிற்றில் பால் வார்க்கும் அறிவிப்பை வெளியிட்ட அரசு
சென்னை: தமிழகத்தில் மாம்பழங்களை கொள்முதல் செய்ய பழக் கூழ் தொழிற்சாலைகள் மறுப்பதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாம்பழக் கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாட்டில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெங்களூரா, பங்கனபள்ளி, இமாம் பசந்த், நீலம், செந்தூரா, அல்போன்சா, ருமானி போன்ற இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மா இரகங்களைப் பொறுத்தவரை, இயற்கையாகவே ஒரு ஆண்டில் அதிக மகசூலும் அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு குறைவான மகசூலும் தரும் தன்மை கொண்டது. இந்த சுழற்சி பெரும்பாலும் அனைத்து இரகங்களிலும் காணப்படுகிறது.

நடப்பாண்டில், பருவநிலை மா உற்பத்திக்கு உகந்ததாக அமைந்ததால் சராசரி மகசூலான எக்டருக்கு 5 முதல் 6 மெட்ரிக் டன் என்பது எட்டு மெட்ரிக் டன்னுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த உற்பத்தி அதிகரிப்பினால் மாம்பழக்கூழ் தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதலுக்கு உகந்த பெங்களூரா இரகம், பதப்படுத்தப்படும் நிறுவனங்களால் விவசாயிகளிடமிருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாம்பழக் கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயித்த பின்னரும் மாம்பழக் கூழ் உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத்துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை, ஆகிய மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன் 16.06.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில். மா பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் சென்ற ஆண்டின் மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், பதப்படுத்தும் நிறுவனங்களின் தேவை குறைந்துள்ளதாகவும், LDIT உற்பத்தி அதிகம் இருப்பதால், விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது எனவும், ஜூன் 20க்கு மேல் மா வில் இனிப்புத்தன்மை (TSS) 20* பிரிக்ஸ் என்ற அளவில் இருக்கும் என்பதால் அப்பொழுது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதாகவும். பதப்படுத்தும் தெரிவிக்கப்பட்டது. நிறுவனங்களால்
மா உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக் கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் தொடங்கவும், மாம்பழக் கூழ் தயாரிக்க பெங்களூரா இரகத்தினை நியாயமான விலையில் உடனடியாக உழவர்களிடமிருந்து மா பதப்படுத்தும் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் கேட்டுக் கொண்டார். அதற்கு, மாம்பழக் கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆவன செய்வதாகத் தெரிவித்து மாம்பழக் கூழ் உற்பத்தியினை தற்போது ஆரம்பித்து உள்ளனர்." என கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications