டாஸ்மாக் டிரான்ஸ்பரில் அதிரடி.. முதல்முறை இப்படி.. சீனுக்குள் வந்த உதயநிதி.. ஆஹா லிஸ்டுலேயே இல்லையே!
சென்னை; டாஸ்மாக் ஊழியர்கள் நியமனம் மற்றும் டிரான்ஸ்பரில் முக்கியமான மாற்றங்களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மேற்கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட காலி பாட்டில் வாங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் தெரிவித்தது.

கண்மூடித்தனமாக கொட்டுவது மற்றும் காலி பாட்டில்களை உடைப்பது போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், காலி பாட்டில் வாங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் தெற்கு டாஸ்மாக் மாவட்டத்தில் 95% பாட்டில்கள் வாங்கப்பட்டு உள்ளன. கோவை வடக்கு 94% பாட்டில்கள் வாங்கப்பட்டு உள்ளன. பெரம்பலூரில் அதிகபட்சமாக - 99% பாட்டில்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களில் ஜூன் மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட 5.83 கோடி பாட்டில்களில் 5.52 கோடி பாட்டில்கள் வாடிக்கையாளர்களால் திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளன.
இவை எல்லாம் குப்பையாவது தடுக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக நீலகிரி , சேலம், வேலூர், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 96.2% பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.35 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு சேமித்து உள்ளது. தற்போது இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ளதால் தமிழ்நாடு முழுக்க இதை விரிவுபடுத்த உள்ளனர்.
அதிரடி திட்டங்கள்: இப்படி பல அதிரடி திட்டங்களை டாஸ்மாக் நிறுவனம் கொண்டு வரும் நிலையில், தற்போது டாஸ்மாக்கின் நியமனம் மற்றும் டிரான்ஸ்பரிலும் முக்கியமான மாற்றங்களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மேற்கொண்டு உள்ளது.
அதன்படி டாஸ்மாக் வரலாற்றில் முதல்முறையாக 2,444 பேர் பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஒரேயடியாக இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்காக முறையாக விதிகளை பின்பற்றி இடமாற்றம் செய்துள்ளனர்.
இவை அனைத்தும் ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்காமல், முழுமையாக கவுன்சிலிங் அடிப்படையில் இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் அமைச்சர் முத்துசாமி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் ஊழியர்கள் நியமனம் மற்றும் டிரான்ஸ்பரில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வரும் நிலையில் அதற்கு எல்லாம் இடமே கொடுக்காமல் முறையாக இந்த முறை டிரான்ஸ்பர் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு மாற்றங்கள்: டாஸ்மாக் நிர்வாகத்தில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் (டாஸ்மாக்) அதன் செயல்பாடுகளை எண்டு டூ எண்டு வரை கணினிமயமாக்க உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்குபவர்கள் விரைவில் கணினி பில் பெறலாம். டாஸ்மாக்கை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பொதுத்துறையான ரெயில்டெல்லுக்கு 294 கோடி ஆர்டரை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஸ்டாக் இருக்கிறது, இல்லை, ஸ்டாக் வேண்டும் என்ற தகவல் தொடங்கி, டிஸ்டில்லரிகளில் இருந்து கடைகளுக்கு ஸ்டாக்கை கொண்டு செல்வது, விற்பனை பில் வரை அனைத்து பகுதிகளும் கணினிமயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications