Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மளிகை கடை, மருந்து கடைக்கு ரெய்டு வாராங்க.. இந்த மருந்தை தப்பி தவறி கூட விற்காதீங்க.. அரசு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் ரேட்டால் எனப்படும் எலி மருந்த விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி யாராவது இந்த மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை இயக்குனர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த மருந்து ஏன் விற்கக்கூடாது, இதனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

ஈரோடு, தருமபுரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர்கள் 'ரேட்டால்' எலி மருந்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்ததாவது: 'ரேட்டால்' என்ற, 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்து தயாரிக்கப்பட்ட எலி மருந்துகளை தமிழக அரசு தடை செய்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த அபாயகரமான மருந்தை விற்பனை செய்ய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu government warns of strict action if rat medicine is sold in grocery stores and drug stores

எனவே, தருமபுரி மாவட்ட மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளிலும் இந்த மருந்தை விற்பனை செய்யக் கூடாது. அதேபோல, பொதுமக்களும் இந்த மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம்.

இம்மருந்து விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிய வேளாண் துறையையும் உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மாவட்டம் முழுக்க கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் யாரேனும் ரேட்டால் மருந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இம்மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் பொதுமக்கள் தருமபுரி(9443635600), நல்லம்பள்ளி(7010172866), பாலக்கோடு(9952401900), காரிமங்கலம்(8526719919), பென்னாகரம்(9443207571), அரூர்(7010983841), மொரப்பூர்(6369976049), பாப்பிரெட்டிப்பட்டி(9444497505) ஆகிய வட்டாரங்களுக்கான பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளிக்கலாம்" என்று கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட வேளாண் இயக்குனர் அனுஷியா வெளியிட்ட அறிவிப்பில், "சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரேட்டால் பேஸ்ட்) என்ற எலி மருந்தானது மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பொதுமக்கள் இம்மருந்தை வாங்க வேண்டாம்.

ஆய்வின் போது விற்பனை செய்வது தெரிய வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் பொது மக்கள் அந்தந்த வட்டார வேளாண்மைத் துறையில் பணிபுரியும் பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்" என்று கூறியிருந்தார்.

எலி மருந்தால் உயிரிழப்பவர்கள் அதிகரிப்பதால் அந்த மருந்தினை விற்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. எலி மருந்து பவுடராகவும், பேஸ்ட் வடிவத்திலும் கிடைக்கிறது. விளை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை, எலிகள் பாழாக்குவதை தடுக்க உணவுப் பொருட்களில், எலி மருந்தை தடவி, விவசாயிகள் வைப்பார்கள். இதை உண்ட எலி, உடனடியாக சாகாமல், குறைந்தது, மூளை மற்றும் நுரையீரலில் ரத்தம் கசிந்து இரண்டு நாட்கள் உயிரோடிருந்து பின் இறந்துவிடும்.

எலி மருந்து சாப்பிட்டால் என்ன ஆகும்: இந்த எலி பேஸ்டை சாப்பிட்டால் எலியைப்போலவே மனிதர்களும் இரண்டு நாட்கள் கழித்தே இறப்பார்கள். எலி மருந்தை சாப்பிட்டால், பாதிப்பின் அறிகுறி உடனே தெரியாது. சீரியஸான நிலை ஏற்பட்ட பிறகே தெரியவரும். அதாவது குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும்.

எலி மருந்து உயிரை பறிக்கும்: ரத்த பரிசோதனைகள் எடுத்தாலும், முடிவுகளில் நார்மல் என்று தான் நமக்கு தெரியவரும். கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து போகும். ரத்தம் உறையும் தன்மை இல்லாமல் போகும். ரத்தம் உறையாமை நிலை ஏற்படுவதால், மூளை மற்றும் நுரையீரலில், உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிவு ஏற்படும். அத்துடன் அசாதாரண நடத்தை; சோர்ந்து துாங்கிய நிலையிலேயே கோமாவிற்கு சென்றுவிடுவது போன்ற நிலை ஏற்பட்டுநோயாளி இறந்து விடுவார். இதை தவிர்க்க, எலி மருந்தை விற்க தமிழக அரசு தடைவிதித்துள்ளார்,

எலி மருந்து அருந்தியிருந்தால், உடனே உயர்தரமான சிகிச்சை மருத்துவமனையில் பெற்றாக வேண்டும்.மருத்துவர்கள் உடனடியாக, 'ஆன்டிடோஸ்' மருந்துகளை கொடுப்பார்கள். நோயாளிக்கு பாதிப்பின் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை என்றாலும், இந்த மருந்துகளை கொடுப்பார்கள். எனவே எலிமருந்தால் யாரும் சாகக்கூடாது என்றால் அதற்கு தடை விதிப்பது தான் முறை என்பதால், அரசு அந்த மருந்தை தடை செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+