Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்! சொன்னபடி செய்த ஸ்டாலின்.. தீபாவளிக்கு முன்பாக கைக்கு வந்த போனஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்குப்போனால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வங்கி கணக்கு மற்றும் நேரடி முறைகளில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

diwali deepavali bonus

தமிழக அரசு தீபாவளி போனஸ்

தீபாவளியை முன்னிட்டு இந்த போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு நுகர்பொருள் வாரிய கழகம், தமிழ்நாடு வளத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும். அதன்படியே இந்த ஆண்டும் அரசு சார்பாக போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.95 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தமாக இந்த போனஸ் வழங்கப்படும். உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களுக்கு 8.66% வரை போனஸ் வழங்கப்படும். 20 சதவீதம் போனஸ் வழங்க ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 20 சதவீதம் ஊதியம் மற்றும் கருணைத் தொகை போனஸாக வழங்கப்படும்; நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 போனஸாக பெறுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அகவிலைப்படி

விரைவில் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி தொடர்பாக அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்பாக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (DA) மூன்று சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு ஜூலை 1 முதல் (பின்தேதியிட்டு) அமலுக்கு வரும். தமிழக அரசும் இதே அளவு அகவிலைப்படியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு வருவது இது இரண்டாவது முறை. கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு அக்டோபரில் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்காக வழங்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) அடிப்படியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி திருத்தங்களுக்கு இந்த தரவுகள்தான் அடிப்படை.

இந்த புதிய உயர்வு காரணமாக, அடிப்படைச் சம்பளம் ரூ. 60,000 உள்ள ஊழியருக்கு, மார்ச் மாத உயர்விற்குப் பிறகு கிடைத்த ரூ. 33,000 அகவிலைப்படியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ. 34,800 கிடைக்கும்.

அகவிலைப்படி உயர்வு கணக்கிடும் முறை

இந்த 3% அகவிலப்படி உயர்வு ஊழியர்களுக்கு எப்படிப் பிரதிபலிக்கும் என்பதைப் பார்ப்போம். உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ₹9,000 ஆக இருந்தால், தற்போது 55% அகவிலப்படி அடிப்படையில் ₹4,950 கிடைக்கிறது. மொத்தமாக ₹13,950 பெறுகிறார். DA 58% ஆக உயர்ந்தால், அவர் ₹5,220 பெறுவார். இதன் மூலம் மொத்தமாக ₹14,220 கிடைக்கும். அதாவது, மாதத்திற்கு ₹270 கூடுதலாகப் பெறுவார்.

அதேபோல, ₹18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஒரு ஊழியருக்கு, தற்போது 55% DA உடன் ₹9,900 கிடைக்கிறது. மொத்தமாக ₹27,900 ஆகிறது. DA 58% ஆக உயரும்போது, ₹10,440 ஆக அதிகரித்து, மொத்த ஊதியம் ₹28,440 ஆக உயரும். இதன் மூலம் மாதத்திற்கு ₹540 கூடுதலாகக் கிடைக்கும்.

தமிழக அரசு போனஸ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்குப்போனால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்த போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு நுகர்பொருள் வாரிய கழகம், தமிழ்நாடு வளத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும். அதன்படியே இந்த ஆண்டும் அரசு சார்பாக போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.95 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தமாக இந்த போனஸ் வழங்கப்படும். உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களுக்கு 8.66% வரை போனஸ் வழங்கப்படும். 20 சதவீதம் போனஸ் வழங்க ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 20 சதவீதம் ஊதியம் மற்றும் கருணைத் தொகை போனஸாக வழங்கப்படும்; நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 போனஸாக பெறுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+