Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கான சூப்பர் திட்டம்.. தமிழக அரசின் இலவச தையல் மிஷின்..இந்த ஆவணங்கள் ரெடியா இருக்கா பாருங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தமிழக அரசு உதவி வருகிறது. இந்த திட்டத்தின் சிறப்புகள் என்ன? பெண்கள் இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? இதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து வைத்து கொள்ளலாம்.

பெண்களின் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையும், நலனையும் செலுத்தி வருகிறது. அதேபோல பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களையும் அறிவித்து, வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறது.

free sewing machine tamil nadu government women

வேலைவாய்ப்பு: முக்கியமாக, கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சுய வேலைவாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் வகையில், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது.

பெண்கள் பெயரில் நிலங்கள் வாங்கி சொந்த தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் மானியத்திலும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதே போல ஆடு, மாடு , கோழி போன்றவை வளர்க்கவும் உதவித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தையல் இயந்திரம்: இதில் குறிப்பிடத்தக்கது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் வழங்கப்படும் இலவச தையல் இயந்திரம் திட்டமாகும்.. கைம்பெண்கள் பொருளாதாரத்தின் நழிந்த பிரிவை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது, இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்கான துணிகள், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 32 வெட்டும் மையங்களுக்கு ஜவுளி மற்றும் கைத்தறி துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

சங்கங்கள்: இந்த மையங்களில் வெட்டப்படும் துணிகள், சீருடை தைக்க சம்பந்தப்பட்ட தையல் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, தைக்கப்பட்ட சீருடைகள் கல்வித்துறையின் 413 உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் 67 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இந்த சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது அதனால், தகுதியுள்ள பெண்கள் இ சேவை மையம் மூலமாக இலவச ‌ தையல் இயந்திரம் பெற விண்ணப்பித்து கொள்ளலாம்.

இதற்கு சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.. 20 முதல் 40 வயது இருக்க வேண்டும்.. தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு தையல் தெரிந்திருப்பதுடன், பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்றிதழ் ரூ.75,000 கீழ் இருக்க வேண்டும்.

அடையாள அட்டை: மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 2 கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள், 75% மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மாராக இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்திற்கு இ சேவை மையம் மூலமாகவும், https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து இருப்பிடச்சான்றிதழ், ஆதார் அட்டை, 2 புகைப்படம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயது சான்றிதழ் போன்றவற்றை இணைத்திருத்தல் வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+