நீட் விலக்கு.. அதிகரிக்கும் அரசியல் அழுத்தம்.. டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. என்னாச்சு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக நாளை (ஏப்ரல் 20) டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதேநேரம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்பை மேற்கொள் காட்டி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கத் தொடர்ந்து மறுத்தே வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த ஆண்டு செப். மாதம் முதல்முறையாக நீட் விலக்கு மசோதாவைத் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த பிப். மாதம் இந்த தீர்மானத்தைத் திருப்பி அனுப்பினார்.

2ஆவது மசோதா
ஆளுநரின் இந்தச் செயல் அப்போது தமிழக அரசியலில் பெரும் விவாதமாக மாறி இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டப்பட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இருப்பினும், அதன் மீது ஆளுநர் ரவி இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.

வலியுறுத்தல்
இதையடுத்து திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாகத் தமிழக எம்பிகள் தொடர்ச்சியாக டெல்லியும் குரல் எழுப்பி வருகின்றர். குறிப்பாக, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்பிய திமுக எம்பிககள், ஆளுநர் ஆர்.என்.ரவியை வாபஸ் பெற வேண்டும் என்று கூட வலியுறுத்தினர்.
Recommended Video

ஆளுநர் டெல்லி பயணம்
இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்ப் புத்தாண்டை ஓட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தையும் கூட தமிழக அரசு புறக்கணித்து இருந்தது. இந்தச் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி நாளை (ஏப்ரல் 20) டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நீட் விவகாரத்தில் கோரிக்கை வலுத்துள்ள நிலையில், ஆளுநர் நாளை (ஏப்ரல் 20) டெல்லி செல்ல உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications