ஞானம், வெற்றி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும்.. ஆளுநர் ரவி, அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
சென்னை: விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும் என்றும் ஆளுநர் ரவி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச்செய்தியில் பதிவிட்டுள்ளார். எம்பெருமான் விநாயகர், நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். சென்னையில், புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் குவிந்துள்ளன. வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ.50 முதல் ரூ.500 வரையிலான சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

விநாயகருக்கு மேல் வைப்பதற்கான சிறியஅளவிலான குடைகளையும் குழந்தைகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். நேற்று மாலையில் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கடை வீதிகள் களைகட்டின. விநாயகருக்கு உகந்த எருக்கம்பூ மாலை, அருகம்புல் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.
விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும் என்றும் ஆளுநர் ரவி பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், முழுமுதற் கடவுள், மூஷிக வாகனன், அனைத்து நற்செயல்களுக்கும் ஆரம்பமாக விளங்கும் எம்பெருமான் விநாயகப் பெருமான் சதுர்த்தி தினம் கொண்டாடும் அனைவருக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கன்னியாகுமரி தக்கலை அடுத்த கேரளபுரம் விநாயகர் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஔவையாரும், திருமூலரும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், இன்னும் தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய எம்பெருமான் விநாயகர், நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறேன் என்றும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications