"நேரம்" பார்த்து டெல்லி கிளம்பிய ஆளுநர் ரவி.. பொன்முடிக்கு மீண்டும் வந்த சோதனை.. திமுக எதிர்பார்க்கல
சென்னை: தமிழக ஆளுநர் ரவி இன்று டெல்லி கிளம்பி சென்றார்.. வழக்கமான அலுவல் பணி காரணமாக தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளார் ஆளுநர் ரவி.
திமுகவின் மூத்த தலைவர் பொன்முடி வழக்கில் ஹைகோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.. அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 வருட சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, அமைச்சர் பதவி + எம்எல்ஏ பதவியை உடனடியாக பொன்முடி இழந்தார்.. அத்துடன், பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்றத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தண்டனை: இதனிடையே, ஹைகோர்ட் தீர்ப்பினை எதிர்த்து பொன்முடி, மற்றும் அவரது மனைவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை ஹைகோர்ட் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது... அத்துடன், விசாலாட்சிக்கு ஜாமீனையும் வழங்கி உத்தரவிட்டது.
இதனால், மறுபடியும் எம்எல்ஏ பதவியை பெற்றுள்ளார் பொன்முடி... மறுபடியும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார்.. மறுபடியும் அவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார். இன்றைக்குள் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து சுப்ரீம் கோர்ட்டின் நகலையும் தன்னுடைய கடிதத்துடன் இணைத்து பரிந்துரை செய்திருந்தார் ஸ்டாலின்.
பரிந்துரை: எனவே, பொன்முடிக்கு ராஜ்பவனில் இன்று பதவிப்பிரமாணத்தை ஆளுநர் நடத்தி வைப்பார் என்றும், பதவி பிரமாணத்திற்கு இன்றைய தினம் ஆளுநர் நேரம் ஒதுக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம், பதவியேற்புக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை ஜரூர் வேகத்தில் இறங்கி செய்ய துவங்கிவிட்டதாகவும் செய்திகள் கசிந்தன.
ஆனால் திடுதிப்பென்று ஆளுநர் ரவி இன்று டெல்லி கிளம்ப உள்ளதாக நேற்றிரவே செய்திகள் கசிந்தன.. வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடியே, இன்று ஆளுநர் டெல்லி கிளம்புவதாக கூறப்பட்டது.
டெல்லி கிளம்பினார்: அதன்படியே, இன்று காலை 6.30 மணியளவில் ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை மறுதினம் அதாவது 16ம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். எனவே, இன்றைய தினம் பொன்முடி அமைச்சராக மறுபடியும் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது... ஒருவேளை நாளை மறுநாள் ஆளுநர் சென்னை திரும்பிய பிறகே பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்றே தெரிகிறது. பொன்முடி பதவி பிரமாண விவகாரம் தொடர்பாக, மூத்த வக்கீல்களிடம் ஆலோசனை நடத்த அவர் சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பரபரப்பு: ஏற்கனவே திமுக அரசு + ஆளுநர் ரவி தரப்பில் அதிருப்திகளும், மோதல் போக்குகளும் நிலவிவரும் நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் நேரத்தில், ஆளுநர் டெல்லிக்கு பறந்திருப்பது மிகப்பெரிய பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
பொன்முடி: ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டதன்படிதான் ஆளுநர் டெல்லி செல்கிறார் என்கிறார்கள். இதற்கும் பொன்முடியின் பதவியேற்பிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று சொல்லப்பட்டாலும், சுப்ரீம் கோர்ட் பொன்முடி விவகாரத்தில் கூறியவைகள் குறித்து ஆலோசனை பெறவே ஆளுநர் டெல்லி செல்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பொன்முடி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தவும் ஆளுநர் முடிவு செய்திருக்கிறாராம். முக்கியமாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணியிடம் சில சட்ட ஆலோசனைகளை கேட்கதான் டெல்லி செல்கிறார் என்கிறார்கள்.
தீவிர ஆலோசனை: அடுத்த 2 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில், அதன் பிறகு பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாமா? கூடாதா? என்பது பற்றி சட்ட நிபுணர்களிடம் விளக்கம் பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications