"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்.. என்னென்ன சேவைகளை மக்கள் பெறலாம்? முகாம் செயல்படும் நேரம் என்ன?
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் என்னென்ன சேவைகளை பொதுமக்கள் மனு அளித்து பெற முடியும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் மட்டுமே அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் இணைப்பு, மின் கட்டண பெயர் மாற்றம், மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட சேவைகளை பெறவும் மனு அளிக்கலாம்.
தமிழ்நாட்டில் அரசுத் துறை சேவைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. நவம்பர் 30ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்
மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு இந்த முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த முகாம்களில் வழங்கலாம்.
இடைத்தரகர்கள் இல்லை
மகளிர் உரிமைத் தொகையைப் பொறுத்தவரை முகாம்களில் எங்கே வேண்டுமானாலும் பெற்று, சரியான தகவல்களோடு பூர்த்தி செய்து, அங்கேயே கொடுக்கலாம். அதேபோல், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வெளியில் யாரிடமும் கிடைக்காது. எந்த அலுவலகத்திலும் கிடைக்காது. தனி நபர்களோ அல்லது இதற்கான இடைத்தரகர்களோ என்று யாரும் இல்லை.
என்னென்ன சேவைகள்?
இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் என்னென்ன சேவைகளை பெற முடியும் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்டவர்கள் இந்த முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான, இருப்பிட, சாதி சான்றிதழ்களை பெற முடியும்.
இணையவழி வீட்டு மனைபட்டா
அதேபோல் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு தரப்பில் வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகை பெற இந்த திட்டர்த்தில் மனு அளிக்கலாம். அதுமட்டுமல்லாமல் கட்டிட வசதி, ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், சுய உதவிக்குழு மூலம் கடன் பெறவும் இந்த முகாம்களில் மனு அளிக்கலாம். அதேபோல் மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் மிணைப்பு, இணையவழி வீட்டு மனைபட்டா பெற மனு அளிக்கலாம்.
முகாம் நடக்கும் நேரம்
இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம்களில் பெறும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த முகாம் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நடக்கும்.
-
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications