இனி போலீசாரே தடை விதிக்கலாம்.. அடித்து ஆடும் ஸ்டாலின்.. டாப் அதிகாரிகளுக்கு ப்ரீ ஹேண்ட்.. அதிரடி!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து குற்றங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு.. போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முக்கியமான புதிய அதிகாரங்களை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதக் கூட்டங்களைக் கலைக்கவும், உத்தரவுகள் மீறப்பட்டால் சட்டப்பூர்வ பலத்தைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023 விதிகளின் கீழ், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளின் போது தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை மூத்த காவல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு வழங்கியுள்ளது. டிசம்பர் 17 அன்று வெளியான இந்த அரசாணை, காவல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி உள்ளது.

இவர்களுக்கு BNSS சட்டப்பிரிவுகள் 152(1) மற்றும் 163(1) இன் கீழ் உயர் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கிறது. உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட இந்த உத்தரவு, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த விவாதத்தைத் தொடர்ந்து வந்தது.
புதிய அதிகாரம் என்ன?
இந்த விதிகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும், அமைதியின்மை, பொது இடையூறுகள் அல்லது அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் உதவுகின்றன. அதாவது முன்பெல்லாம் ஒரு இடத்தில் கூட்டம் கூடுகிறது, பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது, கலவரம் ஏற்படும் சூழல் உள்ளது என்றால் போலீசார் அங்கே 152(1) மற்றும் 163(1) இன் கீழ் தடை உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.
முன்னதாக, இந்த அதிகாரங்கள் பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் சென்னையில் காவல் ஆணையரிடம் இருந்தன. தற்போது, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஆவடி, தாம்பரம் மற்றும் திருநெல்வேலி போன்ற நகரங்களின் காவல் ஆணையர்கள், இணை, துணை ஆணையர்களுக்கும் இந்த அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
போலீஸ் அதிகாரிகளுக்கு இனி கூடுதல் அதிகாரம்
சென்னையைப் பொறுத்தவரை, ஏற்கனவே காவல் ஆணையர் செயல்முறை நடுவர் அதிகாரம் கொண்டிருந்த நிலையில், தற்போது இரண்டு காவல் ஆணையர்கள், நான்கு இணை ஆணையர்கள் மற்றும் பன்னிரண்டு துணை ஆணையர்களுக்கும் இதேபோன்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்புச் செயல்முறை நடுவர்களுக்கு BNSS சட்டப்பிரிவுகள் 126 முதல் 129 வரையிலான அதிகாரங்களும் உண்டு. இது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதக் கூட்டங்களைக் கலைக்கவும், உத்தரவுகள் மீறப்பட்டால் சட்டப்பூர்வ பலத்தைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த நகர்வு உணர்வுபூர்வ சூழ்நிலைகளில் விரைவான, சுதந்திரமான முடிவெடுப்பை உறுதி செய்யும். ஆவடி காவல் ஆணையர் கே. சங்கர், "கட்டுக்கடங்காத சக்திகளைக் கட்டுப்படுத்தி, நகரப் பொது ஒழுங்கைப் பராமரிக்க இது பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
ஆனால், இத்தகைய அதிகாரங்கள் காவல்துறையினரிடம் வழங்கப்படுவது சிவில் உரிமைகளில் அதிகப்படியான தலையீட்டிற்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 144க்கு இணையான தடுப்பு அதிகாரங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை நேரடியாக மீறக்கூடியவை; எனவே, மிகக் கடுமையான ஆய்வு தேவை. 'சட்டம்-ஒழுங்கு' அல்லது 'அவசர நிலை' போன்ற சொற்கள் தளர்வாகப் பயன்படுத்தப்பட்டு, தனிநபர் சுதந்திரத்தில் அதிகப்படியான தலையீட்டைச் சாத்தியப்படுத்தும்.. இது சுதந்திரத்திற்கு எதிரானது.. இதனால் இது போன்ற அதிகாரங்களை மிக கவனமாக வழங்க வேண்டும், என்றுவழக்கறிஞர்கள் பலர் கூறி உள்ளனர்
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications