ஸ்டாலின் இறக்கிய மாஸ்டர் பிளான்.. குமரி முதல் சென்னை வரை.. கடலோர மாவட்டங்களுக்கு பெரிய குட் நியூஸ்
சென்னை: சிறிய துறைமுகங்களுக்கு அதிக தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023க்கு ஒப்புதல் அளித்துள்ளது. கப்பல் கட்டுதல், மறுசுழற்சி மற்றும் துறைமுக நடவடிக்கைகளில் தனியார் துறையின் ஈடுபாட்டை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மின்சார வாகன (EV) பாகங்கள், காலணிகள், கண்ணாடி உற்பத்தி மற்றும் விண்வெளித் துறைகள் உட்பட 22,000 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு முதலீட்டுத் திட்டங்களின் தொகுப்புகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கூட்டத்தில்தான் பொது-தனியார்-பங்கேற்பு (பிபிபி) மாதிரியில் மாநிலத்தில் சிறிய துறைமுகங்களை மேம்படுத்துவதை ஊக்குவிக்கும் தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய கொள்கையானது 1,076 கிமீ கடற்கரையை கொண்ட மாநிலம் முழுவதும் சுமார் 17 சிறிய துறைமுகங்களை மேம்படுத்த உதவும் என்றார்.
எங்கெல்லாம் தொழிற்சலைகள்: தைவானின் ஹாங்ஃபு நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்தில் மிகப்பெரிய தோல் அல்லாத உற்பத்திப் பிரிவை அமைக்கும். செயிண்ட் கோபேன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு புதிய உற்பத்தி ஆலையைக் கட்டும். பிரெஞ்சு கண்ணாடி தயாரிப்பாளர் அக்டோபர் 6 ஆம் தேதி தமிழகத்தில் சோலார் கிளாஸ் மற்றும் கண்ணாடி கம்பளி உட்பட பல்வேறு வணிகங்களில் 3,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
தென் கொரிய நிறுவனமான Seoyon E-Hwa Mobility, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் EV உதிரிபாக உற்பத்தி அலகு ஒன்றை அமைக்கும், இது மாநில அரசாங்கத்தால் மின்சார வாகன உற்பத்திக்கான மையமாக கணிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநிலத்தில் மைலான் லேபரட்டரீஸ், சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் மேனுஃபேக்சரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் முதலீடுகளுக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ஐஏஎம்பிஎல், பெங்களூரு அருகே ஓசூரில் தனது உற்பத்தி வசதியை விரிவுபடுத்தவுள்ளது.
எட்டு திட்டங்களுக்கு ரூ.7,108 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான தொகுப்புகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலீடுகள் மூலம் 22,536 பேருக்கு வேலை கிடைக்கும்.
மாநாடு: ஜனவரி 2024-இல் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் பல முக்கியமான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான விவரங்களை வெளியிட்டார். முக்கியமான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications