சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் பார்க்க போறீங்களா? எப்படி செல்வது? பார்க்கிங் எங்கே? முழு விவரம்!
சென்னை: சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. பார்முலா 4 கார் பந்தயம் குறித்த அட்டவணை மற்றும் பார்க்கிங் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்துகிறது. வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் சென்னையில் நடக்கிறது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.

சென்னை கார் ரேஸ்: 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட், தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.
கார் ரேஸ் போட்டிகளைக் காணச் செல்வோர் மெட்ரோ ரயில் மூலமாகச் செல்லலாம். மவுண்ட் ரோடு, அண்ணா சதுக்கம், பிராட்வே செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். மேலும், சொந்த வாகனங்களில் செல்பவர்கள் பார்க்கிங் செய்வதற்கான இடங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஃபார்முலா 4 ரேஸ் அட்டவணை: ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகளின் கால அட்டவணை, கிராண்ட்ஸ்டாண்ட் இருக்கை விவரங்கள், தீவுத்திடலில் உள்ள பார்வையாளர் மாடங்களின் விவரங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். அதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. மாலை 5.30 மணியளவில் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்.. பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.. உதயநிதி கொடுத்த சர்ப்ரைஸ்!
பார்க்கிங் ஸ்லாட்: கிராண்ட் ஸ்டாண்ட் 1, அண்ணா சாலை முத்துசாமி பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்வோர் தங்கள் வாகனங்களை எம்.எம்.சி கிரிக்கெட் மைதானத்தில் நிறுத்திச் செல்லவேண்டும். சுவாமி சிவானந்தா சாலையில், கிராண்ட் ஸ்டாண்ட் 2, கிராண்ட் ஸ்டாண்ட் 3, கிராண்ட் ஸ்டாண்ட் 4, கிராண்ட் ஸ்டாண்ட் 5 ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அங்கு செல்வோர் தங்கள் வாகனங்களை கலைவாணர் அரங்கத்தில் நிறுத்திச் செல்லவேண்டும்.
கோல்டு, பியர்ல் கிராண்ட் ஸ்டாண்ட் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. HMR, ஸ்பான்ஸர்கள் ஓய்வறை, பிரீமியம் ஓய்வறை ஆகியவையும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்பவர்கள் சென்னை பல்கலைக்கழகம், கடற்கரையில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications