சென்னை டிராபிக் குறையப்போகுது.. சர்தார் படேல் சாலை விரிவாக்கம்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. காந்தி மண்டபம் முதல் ஜிஎஸ்டி சாலை வரை தற்போது உள்ள 4 வழிச்சாலையை சுமார் ரூ.30 கோடி செலவில் 2.5 கி.மீ. தூரத்திற்கு 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சர்தார் படேல் சாலை, சென்னை ஐஐடி முதல் அண்ணா சாலை வரை நான்கு வழிச் சாலையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

கிண்டியில் இருந்து அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மற்றும் அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் காரணமாக கடும் நெரிசல் இருந்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, சர்தார் படேல் சாலையையும், ராஜிவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில், 'எல்' வடிவ மேம் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நகர வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாநகர மேம்பாட்டு நிறுவனம் (CMDA) மற்றும் பொதுப்பணித் துறை (PWD) இணைந்து சாலையை நான்கு வழியிலிருந்து ஆறு வழியாக விரிவாக்க திட்டமிட்டது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. காந்தி மண்டபம் முதல் ஜிஎஸ்டி சாலை வரை தற்போது உள்ள 4 வழிச்சாலையை சுமார் ரூ.30 கோடி செலவில் 2.5 கி.மீ. தூரத்திற்கு 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications