மேகதாதுஅணை: டிகே சிவகுமார் அறிவிப்புக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்! நல்லுறவை கெடுப்பதாக புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் டிகே சிவகுமாரின் இந்த பேச்சு அண்டை மாநிலங்களுடன் நட்புறவை கர்நாடகா வளர்ப்பதாக தெரியவில்லை எனவும் அமைச்சர் துரைமுருகன் சாடியுள்ளார்.

 Tamil Nadu govt opposes Karnataka Deputy CM DK Shivakumars announcment on Mekedatu dam

இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டாவில் சரியான முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எங்களுடைய நீர்வளத்துறை செயலாளர் காவிரி டெல்டாவின் ஆய்வு செய்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் ஆட்சியாளர்களுடன் பேசி ஆய்வு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெற்றிகரமாக தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்துவோம்.

கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் டிகே சிவகுமார் இப்போதுதான் வந்துள்ளார். அவர் வந்த உடன் வேறு ஏதேனும் பேசுவார் என பார்த்தேன். முதலிலேயே மேகதாது அணை குறித்து சிவகுமார் பேசியிருக்கிறார்.

டிகே சிவகுமாரின் இந்த கருத்து அண்டை மாநிலத்துடன் கர்நாடகா இணக்கமாக இருப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இதனிடையே அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு சிவக்குமார் அவர்கள் தெரிவித்ததாக இன்று காலை பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற சிவக்குமார் அவர்கள் மக்களின் வாழ்த்துக்களை பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 Tamil Nadu govt opposes Karnataka Deputy CM DK Shivakumars announcment on Mekedatu dam

உரசிப் பார்க்கும் சிவகுமார்: சிவக்குமார் அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுகிறேன்.சிவக்குமார் அவர்கள் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன். இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+