மருந்து சீட்டில் டாக்டர் எழுதுவது புரியலையா! இனி இந்த பிரச்சனை இருக்காது! தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவர்கள் அனைவரும் புரியும்படி பெரிய எழுத்துகள் அதாவது, CAPTAL எழுத்துகளில் தான் மருந்துகள் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக உடல் நிலை சரியில்லை என்று டாக்டர்களிடம் போனால் அவர்கள் நம்மைப் பரிசோதனை செய்துவிட்டு மருந்துகளை எழுதித் தருவார்கள். ஆனால், பெரும்பாலான நேரம் அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பார்த்தாலே நமக்குத் தலைச் சுற்ற ஆரம்பித்துவிடும்.

அந்தளவுக்குத் தான் டாக்டர்கள் கையெழுத்து இருக்கும். பெரும்பாலான மருத்துவர்கள் மருந்து பரிந்துரை சீட்டுகளில் இப்படித்தான் எழுதித் தருவார்கள். மருத்துவர்கள் ஏன் இதுபோல எழுதித் தருகிறார்கள் என்பது நமக்கும் தெரியாது..
புரியாத எழுத்துகளில் மருந்துகள்: அவர்கள் என்ன எழுதித் தருகிறார்கள் என்பது புரியாமல் தான் நாமும் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம். மருந்தகங்களில் இருக்கும் நபர்களே கூட என்ன எழுதித் தருகிறார்கள் என்று புரியாமல் குழம்பும் நிகழ்வுகளும் கூட நடந்துள்ளன. உடலுக்கு ரொம்பவே சீரிஸயாக முடியாமல் இருக்கும் போது இதுபோல புரியாத வார்த்தைகளில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
இத்தனையும் மருந்து சீட்டுக்களில் தெளிவாக எழுதிக் கொடுக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ரூல்ஸ் இருக்கிறது. அதாவது தங்களுக்கு என்ன மருந்துகள் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் தான் டாக்டர்கள் மருந்துகளை எழுதித் தர வேண்டும். ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைக் கண்டுகொள்வதில்லை.
CAPTAL எழுத்துகளில் மருந்துகள்: மெடிக்கல்கள் ஊழியர்கள் மட்டும் தான் டாக்டர்கள் எழுதித் தருவது புரிகிறது. முன்பே கூறியது போல சில சமயம் அவர்களும் கூட புரிவதில்லை. இதற்கிடையே இது தொடர்பாக மருத்துவத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளில் மருந்துகளை எழுதித் தரும் போது ஆங்கிலத்தில் CAPTAL எழுத்துகளில் தான் எழுதித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நோயாளிகளுக்குப் புரியும் வகையில் தான் மருந்துகள் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில், இப்போது தமிழ்நாடு அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என அனைத்து மருத்துவர்களும் மருந்து சீட்டுகளில் CAPTAL லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது
முன்னதாக மருத்துவர்கள் தரும் மருந்து சீட்டுக்களை படிக்க புதிய தொழில்நுட்பத்தைக் கூகுள் நிறுவனம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டை நாம் ஸ்கேன் செய்தால் போதும்.. அது என்ன மருந்துகள் என்பதைக் கூகுள் நமக்குச் சொல்லிவிடும். இந்த வசதியைக் கூகுள் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications