கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீசாருக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி.. தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த 36 காவலர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள், போலீசார் எனப் பலரும் வைரஸ் தொற்று காரணமாகவே உயிரிழக்கும் துயரங்களும் அரங்கேறியுள்ளன.சென்னை: கொரோனாவால் உயிரிழந்த 36 காவலர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள், போலீசார் எனப் பலரும் வைரஸ் தொற்று காரணமாகவே உயிரிழக்கும் துயரங்களும் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 36 காவலர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் வழங்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் விதத்தில் அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் தீவிரப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பணியின் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Nadu govt orders to provide 25 lakh rupees to the families policemen died by Corona

முக்கியமாகத் தமிழக காவல் துறையில் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 நபர்களின் குடும்ப வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9 கோடியினை நிவாரணத் தொகையாக வழங்கத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடப்பட்டுள்ளார்.

எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து, அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+