7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அந்தஸ்தில் பதவி உயர்வு! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை: 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உதயசந்திரன், எம்.ஏ சித்திக், சந்திரமோகன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2002-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
1995-ஆம் ஆண்டு ஐஏஎஸ் கேடர் பிரிவைச் சேர்ந்த 7 மூத்த அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு (Chief Secretary Grade) பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தப் பதவி உயர்வுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இன்று வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தற்போது பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றி வரும் 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், டிட்கோ (TIDCO) தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா ஆகியோருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் நிதித் துறைச் செயலாளர் டி.உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன் மற்றும் தற்போது மத்திய அரசுப் பணியில் இந்தியத் தலைமை நில அளவையாளராக பணியாற்றி வரும் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா ஆகியோரும் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்தப் பதவி உயர்வுக்காகத் தற்காலிகமாகப் புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், 2002-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக (Principal Secretary) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் சமயமூர்த்தி, முதலமைச்சரின் தனிச் செயலாளர் சண்முகம், பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், சமூக நலத்துறைச் செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி வைத்தியன் உள்ளிட்டோருக்கு இந்த உயர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவி உயர்வுகள் அனைத்தும் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு நெருங்கும் நேரத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications