மகளிர் உரிமை தொகை.. இந்த மாதம் வராது.. ஆனால் தேடி வரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சென்னை: தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான மார்ச் மாதத்திற்கான உதவித்தொகை அடுத்த சில நாட்களில் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மூன்று முக்கிய திட்டங்களின் மூலம், பயனாளர்கள் மாதம் ரூ.3000 வரை தங்கள் வங்கிக் கணக்கில் பெறுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்தத் தொகை விடுவிக்கப்படும். மார்ச் மாதத்திற்கான தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே காண்போம்.
இந்தத் தொகை, அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்
மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம்
சுமார் 4 லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோரும் புதிதாக திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆனால் அடுத்த மாதம் இந்த தொகை வழங்கப்படாது. ஏனென்றால் கடந்த வாரமே.. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான தொகை சேர்த்து வழங்கப்பட்டுவிட்டது.
இதனால் அடுத்த மாதம் மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது. இதனால் மற்ற இரண்டு திட்டங்களின் கீழ் ரூ.2000 பல்வேரு பயனாளிகளுக்கு வழங்கப்டும்.
புதுமைப்பெண் - மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். பயனாளிகள் இளங்கலை படிப்பு படிக்கும் வரை இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மாணவிகள் எங்கும் அலைய வேண்டியதில்லை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
அதேபோல், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் அடுத்த தவணை இந்த மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் புதல்வன் திட்டம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அரசு உதவி புரிகிறது.
புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த தவணை அடுத்த வாரம் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.
மகளிர் உரிமை தொகை பணம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதால்.. மற்ற 2 திட்டத்திற்கான தொகை அடுத்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம் -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்!












Click it and Unblock the Notifications