கூட்டுறவு அங்காடி மூலம்.. 16 டன் சன்னரக அரிசி விற்பனை! ஆனால் நிலைமையே வேற! புலம்பும் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை உயர்வு மக்களை பாதித்திருக்கிறது. நிலைமையை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், கூட்டுறவு அங்காடிகள் மூலம் சன்னரக அரிசியை அரசு விற்பனை செய்தது. இந்நிலையில் எவ்வளவு அரிசி விற்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து அறிக்கை வெளியாகியிருக்கிறது.

அதில், "தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 184 விற்பனை நிலையங்கள் மூலம் 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Fine Rice

தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30 (பொட்டலத்துடன்) என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை 17.10.2026 அன்று சென்னையில் முதற்கட்டமாக 30 இடங்களில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்காகத் மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னாக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதில், 574,058 மெட்ரிக் டன் அரிசி 34 மாவட்டங்களுக்குப் அனுப்பப்பட்டது. அவற்றில் 439,108 மெட்ரிக் டன் அரிசி விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் மொத்தம் 184 விற்பனை நிலையங்கள் (Sale Points) மூலம் சன்னரக அரிசி விற்பனை நடைபெற்று. 21.10.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 16 மெட்ரிக்டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள 19 விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை 1286 கிலோ சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் மாநகராட்சி வணிக வளாக விற்பனை முனையில் 296 கிலோவும், கார்த்திகேயன் சாலையில் உள்ள விற்பனை முனையில் 178 கிலோவும் பார்க் டவுன் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் விற்பனை முனையில் 120 கிலோவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன். அரிசி விலை அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசின் கணக்கும் எதார்த்தமும்

வெளியிலிருந்து பார்ப்பதற்கு 16 டன் என்பது பெரிய கணக்காக தோன்றலாம். உண்மை என்னவெனில், இது தமிழ்நாட்டு மக்களின் வெறும் 2 நிமிட உணவு தேவைக்கு கூட காணாது என்பதுதான். ரேஷன் கடைகளில் மாதத்திற்கு 3.63 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 12,100 மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. அப்படியெனில் 16 மெட்ரிக் டன் எனில், அது தமிழ்நாட்டின் மொத்த தேவையில் வெறும் 2 நிமிட தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்.

மட்டுமல்லாது, ரேஷன் அரிசியைதான் சன்னரக அரிசி என்று சொல்லி ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள் என மக்கள் புலம்புகின்றனர். சேலத்தில் கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அமுதம் கடைகளில் வாங்கிய சன்னரக அரிசியை திருப்பி கொடுத்துவிட்டு மக்கள் தங்கள் பணத்தை கேட்டது சர்ச்சையை கிளப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+