ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு.. ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி! எதில், எப்போ பார்க்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வரும் 'ஜெயிலர் 2' படத்தை வீட்டில் இருந்தபடியே பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். குறிப்பாக, தியேட்டரில் படத்தை பார்க்க முடியாதவர்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான தகவல்கள்தான் இப்போது வெளியாகி இருக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடித்திருக்கும் இந்த படம், வெளியான முதல் வாரத்திலேயே வசூலில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அதன் மாஸ் காட்சிகள், ரஜினியின் ஸ்டைல், மற்ற நடிகர்களின் ஸ்கிரீன் ப்ரெசென்ட் என பல விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது அடுத்த எதிர்பார்ப்பு, இந்த படம் ஓடிடிக்கு எப்போது வரும் என்பதுதான்.

Jailer Rajinikanth Amazon Prime Video OTT Release Nelson

ஜெயிலர் 2 ஓடிடி அப்டேட்

'ஜெயிலர்' படத்தை போலவே அதன் 2 பாகமும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ சுமார் ரூ.160 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், ஏற்கெனவே அமேசான் பிரைம் பயன்படுத்துபவர்கள் படத்தை அதே தளத்தில் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஓடிடி தளத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகியிருந்தாலும், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

ஓடிடி ரிலீஸ்

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஜெயிலர் 2 திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர் வெளியீட்டுக்கு பிறகு சுமார் 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் படம் வரலாம் என்ற தகவலும் பேசப்படுகிறது. ஆனால் நவம்பர் 12 என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட தேதி கிடையாது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் அல்லது அமேசான் பிரைம் வீடியோ வெளியிடும் அறிவிப்புதான் இறுதியான தகவலாக இருக்கும்.

Jailer Rajinikanth Amazon Prime Video OTT Release Nelson

கவனம் பெறும் முதல் பாகம்

ஜெயிலர் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, முதல் பாகமான 'ஜெயிலர்' படத்தையும் ரசிகர்கள் மீண்டும் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தை தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள், ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்கள். ரஜினியின் மாஸ் காட்சிகளையும், நெல்சனின் காமெடி கலந்த திரைக்கதையையும் மீண்டும் ரசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. குறிப்பாக, படத்தில் மூர்த்தி அண்ணனாக நடித்த நமோ நாராயணனின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், ஓடிடியில் படம் வெளியான பிறகு அந்த காட்சிகளை மீண்டும் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

மொத்தத்தில், 'ஜெயிலர் 2' படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், நவம்பர் 12-ம் தேதி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது அதனால் ரஜினி ரசிகர்கள் காத்திருக்கும் முக்கியமான அப்டேட், ஓடிடி வெளியீட்டு தேதியை சன் பிக்சர்ஸ் எப்போது அறிவிக்கப் போகிறது என்பதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+