மக்களே அச்சம் வேண்டாம்! மாநிலத்தில் புதிய வகை கொரோனா இல்லை.. தமிழகத்தில் இப்போது என்ன நிலை! பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவல் குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக அரசு இப்போது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலத்தில் பரவும் கொரோனா வகை, அரசு எடுத்து வரும் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்பு இத்தனை காலம் கட்டுக்குள் இருந்த நிலையில், இப்போது அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கு புதிய உருமாறிய கொரோனாவும் பரவ தொடங்கியுள்ளது.

இதனால் எங்கு உலகின் மற்ற பகுதிகளிலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

இந்தச் சூழலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொடர்பாகச் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று (22.12.2022) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் எடுத்துரைத்தார். சமீபத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 புதிய வகை கொரோனா இல்லை

புதிய வகை கொரோனா இல்லை

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் சுகாதாரச் செயலாளர் சுற்றறிக்கையின்படி. கோவிட் தொற்று எண்ணிக்கையை கண்காணிக்கவும் தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை (Whole Genomic Sequencing) செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும். இது BA-2 உருமாறிய கொரோனாவின் உள்வகையாகும். சில ஆசிய நாடுகளில் தற்போது பரவி வரும் BF-7 வகையான கொரோனா தொற்று BA-5-ன் உள்வகையாகும். இத்தகைய BA-5 தொற்று தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் கண்டறியப்பட்டு இந்த தொற்றின் வகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 மருத்துவமனைகளில் படுக்கைகள்

மருத்துவமனைகளில் படுக்கைகள்

தற்போது தமிழ்நாட்டில் கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையிலும் அரசு மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்குத் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கண்ட வசதிகள் கூடுதலாக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கோவிட் பரிசோதனை செய்யவும். கோவிட் தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யவும். நோய் பரவலைத் தொடர்ந்து கண்காணிக்கவும் மேலும் இன்புளூயன்சா மாதிரி காய்ச்சல் மற்றும் அதிக நுரையீரல் தொற்று (IL & SARI) ஆகிய நோய்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.

 வழிகாட்டுதல்கள்

வழிகாட்டுதல்கள்

முதலமைச்சர் கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி குறிப்பாகப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள் அரங்குகளில், சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே கடைப்பிடிப்பது, அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 சோதனை

சோதனை

சர்வதேச விமானநிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி (SOP) கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்களைப் பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+