வாழ்க்கையே மாறப் போகுது! அள்ளித் தரும் தமிழக அரசு! வெளியான முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ண வேண்டாம்!
சென்னை: தமிழ்நாடு அரசு திருநங்கைகள் திருநம்பிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் உயர் கல்வி பயில விரும்பும் திருநங்கைகள் திருநம்பியர் ஆகியோரது விடுதி கட்டணம் கல்வி செலவை அரசை ஏற்கும் எனவும் வருமான உச்சவரம்பு எதுவும் இன்றி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் பெறவும் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் சுயதொழில் துவங்க மானியத்தொகை, சுயஉதவிக்குழு பயிற்சி மற்றும் மானியம், இலவச தையல் இயந்திரங்கள், காப்பீட்டுத்திட்ட அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழை திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.
உயர்கல்வி தொடர விரும்பும் அனைத்து திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட, அனைத்து கல்விச் செலவினங்களையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.

இதில் பயன்பெற, அனைத்து திருநங்கைகளும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, தமிழ்வழியில் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. நலவாரியத்தால் வழங்கப்பட்ட, அடையாள அட்டையினை சான்றாக காண்பித்து, இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இந்நிலையில், உயர் கல்வி பயிலும் திருநங்கைகள், திருநம்பியர் கல்வி, விடுதி கட்டணம் செலவை அரசே ஏற்கும் எனவும், வருமான உச்சவரம்பு ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," சென்னை மாவட்டத்தில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் இவர்களும் பயனடைய ஏதுவாக அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநம்பி உள்ளிட்டோர் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை சான்றாக சமர்ப்பித்து, வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, பிற உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்விக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது,
மேலும், தமிழ்நாடு அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத் தொகை வழங்குதல், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட நலத்திட்டங்கள் அனைத்தும் திருநங்கைகள் பெற்று பயனடைய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாமும் நடைபெறவுள்ளது என அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications