எக்ஸாமுக்கு ரெடியாகுங்க! வெளியான அரையாண்டு தேர்வு அட்டவணை! 6 முதல் 12 வரை எந்தெந்த தேதியில் தேர்வு?
சென்னை: 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும், 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் 23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மாணவர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை எழுத வேண்டிய அரையாண்டுத் தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த அரையாண்டுத் தேர்வு பொதுவாக ஒரே தேதிகளில் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது மிக முக்கியமான தேர்வாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் மார்ச் மாதத்தில் நடைபெறும் பொதுத் தேர்விற்கான முன்னோட்டமாக இந்த தேர்வு கருதப்படும் நிலையி, தேர்வு தேதி குறித்து முழு விபரமாக பார்க்கலாம்.

இதில், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தேர்வு தொடங்கி 23ஆம் தேதியும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் டிசம்பர் 15ஆம் தேதி தேர்வு தொடங்கி 23ஆம் தேதி நிறைவடைகிறது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் 23 வரை தேதி நடுபெறுகிறது.
6 முதல் 9 ஆம் வகுப்புகள்:
டிசம்பர் 15 - தமிழ்
டிசம்பர் 16 - ஆங்கிலம்
டிசம்பர் 17 - விருப்ப மொழி
டிசம்பர் 18 - கணிதம்
டிசம்பர் 19 - உடற்கல்வி
டிசம்பர் 22 - அறிவியல்
டிசம்பர் 23 - சமூக அறிவியல்
10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10 - தமிழ்
டிசம்பர் 12 - ஆங்கிலம்
டிசம்பர் 15 - கணிதம்
டிசம்பர் 18 - அறிவியல்
டிசம்பர் 22 - சமூக அறிவியல்
டிசம்பர் 23 - விருப்ப மொழி
11ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10 - தமிழ்
டிசம்பர் 12 - ஆங்கிலம்
டிசம்பர் 15 - இயற்பியல் / பொருளாதாரம்
டிசம்பர் 17 - கணிதம் / விலங்கியல் / வர்த்தகம்
டிசம்பர் 19 - வேதியியல் / கணக்கு பதிவியல்
டிசம்பர் 22 - கணினி அறிவியல்
டிசம்பர் 23 - உயிரியல் / வரலாறு / தாவரவியல்
12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10 - தமிழ்
டிசம்பர் 12 - ஆங்கிலம்
டிசம்பர் 15 - கணிதம் / விலங்கியல் / வணிகவியல் / நுண்ணுயிரியல் / விவசாய அறிவியல்
டிசம்பர் 17 - வேதியியல் / கணக்குப்பதிவியல் / புவியியல்
டிசம்பர் 19 - இயற்பியல் / பொருளாதாரம்
டிசம்பர் 22 - உயிரியல் / தாவரவியல் / வரலாறு
டிசம்பர் 23 - கணினி அறிவியல்" தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications