"மந்திரம் கற்போம்.. தந்திரம் கற்போம்.." பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
சென்னை: தமிழ்நாட்டின் கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, மனித குலத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசினார்.
ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். அப்போது ஜனாதிபதிக்கு ஒடியா மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் புத்தகத்தை முதல்வர் பரிசாக அளித்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்மு அங்கு ஓய்வு எடுத்தார்.

அதன்பிறகு இன்று காலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில், 762 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். கவுரவ டாக்டர், முனைவர் பட்டங்களை பெறுவோர் மற்றும் படிப்பில் பதக்கங்களை பெற்றோருக்கு திரெளபதி முர்மு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அப்போது ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அருகருகே நின்றனர். இந்த விழாவின் முடிவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசினார். ஜனாதிபதி பேசியதாவது:- வளமான கலாசாரம், நாகரிகத்தை கொண்டது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் கோவில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, மனித குலத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது திருக்குறள் பல நூற்றாண்டுகளுக்கு அனைவரது வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளது.

சென்னை பல்கலைகழகத்தில் படிக்கும் 1.18 லட்சம் பேரில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை பல்கலைக்கழகம், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், விவி கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களை நமக்கு அளித்துள்ளது. கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலைக்கழகம் உள்ளது. மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது.
நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். சவால்களை சமாளிக்கும் உறுதியை மாணவர்கள் பெற வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் மிகப்பெரும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தின் நிலை மேம்பட்டு வருகிறது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்றை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். மந்திரம் கற்போம்.. தந்திரம் கற்போம்.. வானை அளப்போம்.. விண்மீனை அளப்போம்.. என்ற அவருடைய பாடல் உங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications