தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 724 பேர் பாதிப்பு.. எங்கெல்லாம் இன்னும் பாதிப்பு அதிகம்!
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,26,261 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2020 மார்ச்சில் தொடங்கிய நிலையில் 2021 பொங்கல் பண்டிகை நெருங்கும் இந்த வேளையில் 8லட்சத்து 26 ஆயிரம் பேரில் சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே நோய் பாதிப்புடன் உள்ளார்கள்.

சென்னை உள்பட எல்லா மாவட்டங்களுமே கொரோனாவால் முன்பு போல் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை . தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,26,261 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8,380 பேர் மட்டுமே சிசிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று கொரோனா தொற்றால் 13 பேர் பலியாகிய நிலையில் இன்றும் 7 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,222 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 857 பேர் மீண்டனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 78,06,875 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 208 பேர், கோவையில் 76 பேர், செங்கல்பட்டில் 40 பேர், திருவள்ளூரில் 36 பேர், திருப்பூரில் 27 பேர், ஈரோட்டில் 27 பேர், காஞ்சிபுரத்தில் 32 பேர், சேலத்தில் 48 பேர், திருச்சியில் 20 பேர் மற்றும் மதுரையில் 13 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில்இருந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 44 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications