அமைச்சர் மா.சு வீட்டில் விசேஷம்! பிறவிப் பயனே இது தான்..மகிழினி! மகிழ்ச்சியோடு அவர் சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். தனது 12 வயது பேத்தியின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் அவர் தனது பிறவிப் பயனே இதுதான் என மகிழ்ச்சியுடன், வீடியோவைப் பகிர்ந்து இருக்கும் நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்ரமணியன். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் முக்கிய திமுக புள்ளி. அதிமுகவில் சைதை துரைசாமியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி அதனை திமுக கோட்டையாக மாற்றியவர். தற்போது சைதாப்பேட்டை எம்எல்ஏவாக இருக்கும் அவர் அதற்கு முன்னதாக சென்னை மேயராகவும் இருந்தவர்.

தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும், 2021 ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பதவி பதவி ஏற்ற உடனே தமிழகத்தின் முக்கியத் துறைகளில் ஒன்றான சுகாதாரத்துறை சுப்பிரமணியனுக்கு கொடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டுபவர்.

Ma Subramanian dmk chennai

சென்னையை பொருத்தவரை வடசென்னை, தென்சென்னை ஆகியவற்றுக்கு மா சுப்பிரமணியனும், சேகர்பாபு தான் பொறுப்பு என்பது திமுகவினருக்கு தெரிந்தது தான். அரசியல் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். வருடம் தோறும் சென்னையில் எங்கு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றாலும் அதில் கலந்து கொள்வார். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். உண்மையை சொல்லப்போனால் தமிழ்நாட்டில் அதிக தூரம் ஓடிய அமைச்சர் என்றால் அது நிச்சயம் மா.சுப்பிரமணியன் தான்.

இந்த வயதிலும் உடற்பயிற்சி, நடை பயிற்சி, ஓட்ட பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருபவர். இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் மா. சுப்ரமணியன். அவரது பேத்தி மகிழினி 12-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர்,எம் பிறவிப்பயன்களின் அடையாளங்களில் ஒன்றான என் பேத்தி"மகிழினி"யின் மகிழ்ச்சிகரமான 12 வது பிறந்தநாள்"என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மட்டுமல்ல மகிழினி குழந்தையாக இருந்ததில் தொடங்கி தற்போது வரை அவரது ஒவ்வொரு பிறந்தநாளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவது மா.சுப்பிரமணியனின் வழக்கம். தற்போது மகிழினி வளர்ந்து விட்டபோதிலும் பேத்தியின் பிறந்தநாளை தொடர்ந்து கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மகிழினிக்கு திமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+