கேரளாவுக்கு போகாதீங்க.. கல்லூரி மாணவர்களுக்கு தமிழக உயர்கல்வித்துறையில் வந்த முக்கிய அலர்ட் மெசேஜ்!
சென்னை: கல்லூரி மாணவர்கள் கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முன்னெச்சரிக்கையாக கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு அருகே 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த சிலர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நிபா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தமிழ்நாடு - கேரள எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை சார்பில், அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள், கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக கேரளாவுக்கு செல்வது வழக்கம். தற்போதும், பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் தான் தமிழக உயர்கல்வித்துறை, நிபா வைரஸ் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
முன்னதாக, நிபா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் அண்மையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சனை, மனநலப் பிரச்சினை ஆகியவை நிபா வைரஸ் தாக்குதலின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் உள்ள நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.
அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications