Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்பிபிஎஸ் சேர திட்டமா? கல்வி கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலாண்மை ஒதுக்கீட்டில் (Management Quota) மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு கட்டணம் ரூ ரூ 4.34 முதல் 4.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் 2025- 2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு கட்டணம் ரூ 1.50 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு ரூ 13.5 லட்சமாக இருந்த எம்பிபிஎஸ் கட்டணம், தற்போது முதல் 15 லட்சமாக உயர்ந்துள்ளது.

tamil nadu medical college

21 சுயநிதி கல்லூரிகளில் தமிழக அரசு ஒதுக்கீட்டு கட்டணங்கள் ரூ 4.34 முதல் 4.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்விக் கட்டணம் ரூ 27 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகம்

மாநிலத்தில் உள்ள 4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களிலும் மருத்துவ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒதுக்கீட்டில் ரூ 5.40 லட்சமாகவும் மேனேஜ்மென்ட் கோட்டாவில் ரூ 16.20 லட்சமாகவும் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் ரூ 30 லட்சமாகவும் எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டணம்

இதை தவிர, கூடுதலாக, 60,000 ரூபாய் வரை மேம்பாட்டு நிதியாக வசூலிக்கலாம். மற்றபடி, கல்வி கட்டணம், சிறப்புக் கட்டணம், சேர்க்கை கட்டணம் என, அனைத்து விதமான கட்டணங்களும் இதற்குள் அடங்கும்.

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்கள், கல்லுாரிகளைத் தேர்வு செய்வதற்கு முன், அதற்கான கட்டண விபரங்களை முழுமையாக அறிந்து முடிவு எடுக்குமாறு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

எம்பிபிஎஸ் படிப்பு

தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 3,450 எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன. இதில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கும் 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன.

குழு

அந்த இடங்களுக்கான, இந்தாண்டு கல்வி கட்டணத்தை, நீதிபதி ஆர்.பொங்கியப்பன், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ப.செந்தில்குமார், டாக்டர் கீதாலட்சுமி, ஆர்.பாலசந்திரன், கே.ஆனந்தகண்ணன் ஆகியோர் அடங்கிய குழு, பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின் இறுதி செய்துள்ளது. இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலாண்மை ஒதுக்கீட்டு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

கட்டணத்தில் என்னென்ன அடங்கும்?

கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வகம் /கணினி /இணைய கட்டணம், நூலக கட்டணம், விளையாட்டு கட்டணம், பராமரிப்பு மற்றும் வசதிக் கட்டணம், சாராத செயல்பாடுகளுக்கான கட்டணம் மற்றும் பிற தொடர்ச்சியான செலவினங்கள் ஆகியவை இந்தக் கட்டணத்தில் அடங்கும்.

விடுதி கட்டணம்

விடுதி, போக்குவரத்து மற்றும் உணவுச் செலவுகள் இந்தக் கட்டணத்தில் அடங்காது. இவை விருப்பமானவை. இந்தக் கட்டண விவரங்களை கல்லூரி நிர்வாகங்கள் கலந்தாய்வுக்கு முன்பே தேர்வு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்த விதமான கூடுதல் கட்டணங்களையும் அல்லது நன்கொடைகளையும் வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிமீறல் ஏற்பட்டால், அங்கீகாரம் ரத்து, இணைப்பை நீக்குதல் மற்றும் அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் 5-ம் ஆண்டு (ஹவுஸ் சர்ஜன்சி)க்கும் கட்டணம் வசூலிப்பதாகவும், விடுதிக் கட்டணங்கள் தெளிவற்றதாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+