சூப்பர்.. கெத்து காட்டபோகும் அரசு பள்ளிகள்.. பக்கபலமாய் ஐஏஎஸ் ஆபீசர்ஸ்.. பறந்து வந்த மேஜர் அறிவிப்பு
அரசு பள்ளிகளை மேம்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளனர்
சென்னை: அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசின் 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டத்திற்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 37,554 அரசு பள்ளிகள் இருக்கிறது. இதில் 52,75,203 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்கள் மிகவும் பாழடைந்து இருப்பதாக தொடர் புகார்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக உண்டு உறைவிட பள்ளிகள், மலை வாழ் பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடங்கள், கிராமப்புற பள்ளிக்கூடங்கள் ஆகியற்றின் நிலைமை மோசமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையை மாற்ற தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட இதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று புகார்கள் மேலெழுகிறது. எனவே அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அரசு மட்டுமல்லாது, பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானலும் பள்ளிக்கு நிதியளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

நன்கொடை
இதற்கு 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' என்றும் பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக முதலமைச்சரே அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சத்தை நிதியாக வழங்கினார். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் ரூ.50 கோடி நன்கொடையாக பெறப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் கூறுகையில், "எல்லா முன்னேற்றத்தையும் அரசு முழுமையாக செய்ய முடியும் என்று கூறிவிட முடியாது. எனவே சில நோக்கங்களுக்கு அரசுடன் மக்களும் கைக்கோர்க்க வேண்டும்" என்று கூறியிருந்தார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியானது வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். எனவே பல்வேறு பிரமுகர்களும் இதற்கு நிதியளிக்க முன்வந்தனர்.

நிதியுதவி
இதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்களும் நிதியளிக்க முன்வந்தனர். இவர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிப்பதாக கூறியிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரூ.1.29 கோடியை நிதியாக முதலமைச்சரிடம் வழங்கினர். திமுக எம்எல்ஏக்கள் தவிர, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோரும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, எம். பூமிநாதன், டாக்டர் டி.சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிதியாக வழங்கியுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள்
இந்நிலையில் இவர்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும் 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டத்திற்கு தங்களது ஒருநாள் ஊதியத்தை நிதியாக அளிப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளாக 39 ஐஏஎஸ் அதிகாரிகளும், இது தவிர 38 மாவட்டங்களின் ஆட்சியர்கள் என மொத்தம் 77 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து சிறப்பு அதிகாரிகளாகவும் சிலர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை இந்த திட்டத்திற்கான நிதியாக வழங்க உள்ளதாக கூறியுள்ளனர். எனவே அரசு பள்ளிகளை மேம்படுத்த கூடுதல் நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
டெல்லியை போல தமிழ்நாட்டிலும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாநில அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் 'மாதிரி பள்ளிகள்' மற்றம் தகைசால் 'பள்ளிகள் திட்டம்'. தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளும் நிதி வழங்க முன்வந்துள்ளதால் அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications