மாசி மாதத்தில் வீடு, மனை வாங்கப் போறீங்களா? கண்டிப்பாக ‘இதை’ மறக்க வேண்டாம்.. அதிமுக்கிய தகவல்!
சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ( டோக்கன்கள் ) வழங்கப்படும் எனவும், 10ஆம் தேதி அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பத்திர பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், அவற்றை முகூர்த்த தினங்களில் செய்வது வழக்கம். அந்த வகையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் வீடு, நிலம், வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மக்கள் வாங்குகின்றனர்.

குறிப்பாக அசையா சொத்துக்களான வீடு மற்றும் நிலம் வாங்க சுப முகூர்த்த தினங்களில் மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். இதன் காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.
இதனால் பலரும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். இதனை தவிர்க்கும் வகையில் பத்திரப்பதிவு செய்வதற்காக பல சிறப்பு வசதிகளை தமிழக பத்திர பதிவுத்துறை அறிவித்து வருகிறது. கடந்த மாதம் கூட முதல் தை முகூர்த்தத்தில் அதிக அளவு பத்திரப்பதிவு செய்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது மாசி மாத முகூர்த்தம் 10ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் கூட்ட நெரிசல் மற்றும் மக்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்க கூடுதலாக டோக்கன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ( டோக்கன்கள் ) வழங்கப்படும் என பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக பத்திரப் பதிவுத் சார்பில் துறை கூடுதல் முன் பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான 10.03.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 10.03.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன் பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன் பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன் பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன் பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது." என கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications