விஜய் மாநாட்டிற்கு கூட்டம் வந்தது எப்படி? பின்னணி யார்? விசாரிக்கும் உளவுத்துறை.. ஆனால் வேறு காரணம்
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மிகப்பெரிய அளவில் கவனம் பெற்ற நிலையில் தமிழக உளவுத்துறை இது தொடர்பாக தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாடு முதல் தவெக மாநாடு என்றாலும் தேசிய அளவில் கவனம் பெற்றது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தேசிய அளவில் கவனிக்கப்பட்ட இந்த மாநாட்டில் விஜய் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்து பேசி இருந்தார். நடிகர் விஜய் சமீபத்தில் திமுக மாநாட்டில் பேசுகையில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டார். ஒன்று.. தான் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் போதே.. சினிமா உலகில் கோடிகளில் பணம் சம்பாதிக்கும் போதே.. அரசியலுக்கு வந்துள்ளேன் என்றார். அதேபோல் மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க.
திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. அரசியல் எதிரி மட்டும்தான் எங்களுக்கு. ஆபாசம், அல்லு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை . வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதிங்க. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள், என்று கூறி இருந்தார்.
யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள்., என்று விஜய் பேசி இருந்தார்.
பதிலடி: இதற்கு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் விஜய் பெயரை குறிப்பிடாமல் பதிலடியும் தந்திருந்தார். அதில் , திமுக அரசு சிறப்பாகச் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. இன்று வருபவன் எல்லாம், புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழியவேண்டும் என பேசி வருகிறார்கள். தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பேரறிஞர் அண்ணா பாணியில் சொல்கிறேன்.. வாழ்க வசவாளர்கள்.
அவர்கள் பேசுவதைப் பற்றி எல்லாம் நான் கவலையே படவில்லை. எங்கள் போக்கு மக்களுக்கு நல்லது செய்யும் போக்குதான். மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு நேரம் போதவில்லை. எந்த நம்பிக்கையோடு மக்கள் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை: இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மிகப்பெரிய அளவில் கவனம் பெற்ற நிலையில் தமிழக உளவுத்துறை இது தொடர்பாக தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறதாம். விஜய் கூட்டத்திற்கு இவ்வளவு பேர் வந்தது எப்படி எந்தெந்த ஊர்களில் இருந்து வந்தார்கள். எப்படி கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்கள் யார் .. திரட்டியது யார் ... செலவு செய்யப்பட்டது எவ்வளவு என்றெல்லாம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாக எந்த பொதுக்கூட்டம் நடந்தாலும் இப்படி விசாரிப்பது வழக்கம். பொதுக்கூட்டம் முடிந்ததும் அது எந்த கட்சியாக இருந்தாலும் உளவுத்துறை விசாரிப்பது வழக்கமே. அப்படிதான் விஜயின் இந்த மீட்டிங் பற்றியும் விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications