இதுதான் சென்னை.. இந்தியாவிலேயே நம்பர் 1.. "இதில்" பெங்களூர், மும்பை எல்லாம் அப்பறம்தான்.. குட்நியூஸ்
சென்னை: இந்தியாவிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீடுகளில் தமிழ்நாடுதான் நம்பர் 1 என்று அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. 2014-2022 ஆண்டுகளில் தமிழ்நாடுதான் அதிக அளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஈர்த்து இருக்கிறது.
'Indian Tech Start-up Funding Report 2022 என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. Inc42 என்ற ஸ்டார்ட் அப் தகவல் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதன் மூலம் 4 பில்லியன் டாலர் பெற்றுள்ளன.
அதாவது 2014 - 2022 ஆகிய 8 ஆண்டுகள் காலத்தில் சென்னையில் 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. Tiger Global, Sequoia, Chiratae Ventures மற்றும் Iron Pillar போன்ற முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளன.

ஸ்டார்ட் அப்
சென்னைக்கு அடுத்தபடியாக புனே, ஹைதராபாத், அஹமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் டாப் பட்டியலில் இடம் பிடித்து உள்ளன. 2022ம் ஆண்டில் மட்டும் தனியாக கணக்கிட்டால் முதல் 5 இடங்களில் பெங்களூர், டெல்லி , மும்பை, சென்னை, ஹைதராபாத் உள்ளது. சென்னையில்தான் முதலீடு செய்யப்பட்ட தொகை இதில் அதிகம் ஆகும். அதோடு முதலீடு செய்த நிறுவனங்கள் அதன் மூலம் முதலீடு செய்யப்பட்ட தொகையை ஒப்பிட்டு பார்த்தால், அதிலும் சென்னைதான் டாப்பில் உள்ளது. அதாவது சென்னையில் அதிக மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

ஹப்
அதே சமயம் இந்திய அளவில் மற்ற பெரிய நகரங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரும் முதலீடுகள் பெரிய அளவில் குறைத்து உள்ளதாக இந்த ரிப்போர்ட் தெரிவிக்கிறது. அதாவது பெங்களூர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரும் முதலீடுகள் 2022ல் பெங்களூரில் 14 சதவிகிதம் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் இது 13 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது இந்த நகரங்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்தாலும், அவர்களுக்கான முதலீடுகள் கிடைக்கவில்லை. அதோடு சென்னை இதில் முதலில் இருந்தாலும் தேசிய அளவில் இந்தியாவில் 2022ல் குறைந்த அளவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. 652 நிறுவனங்கள் மட்டுமே இந்த ஆண்டில் தொடங்கப்பட்டு உள்ளது.

2015
2015ல் இந்தியாவில் ஒரே ஆண்டுகள் 5000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. அவ்வளவு நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நாட்டில் 2022ல் 652 நிறுவனங்கள் மட்டுமே தொடங்கப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

முதலீடுகள்
அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. 2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் இந்த முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications